சோலார் பேனல் மோசடி வழக்கு குறித்த விசாரணைக் கமிஷனில், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்தின் பெயரைக் குறிப்பிட்டு சரிதா நாயர் வாக்குமூலம் கொடுத்ததாக வெளியான தகவல் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, வடவள்ளியில் உள்ள சர்வதேச ஆலோசனை மற்றும் நிதி நிறுவனத்தின் இயக்குநர்களான சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் மீது காற்றாலை அமைத்து தருவதாகக் கூறி, ரூ.26 லட்சம் மோசடி செய்ததாக கடந்த 2009 ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, கோவை 6வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்காக இன்று கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜரானார்.
ஆனால் பிஜூ ராதாகிருஷ்ணன் ஆஜர்படுத்தப்படவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை அடுத்த மாதம் 19 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரிதா நாயர், ''கேரள மாநில காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த உட்கட்சிப் பூசலில், முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டியை சிக்க வைக்க என்னை கருவியாக பயன்படுத்திக் கொண்டனர். என் மீது பொய் வழக்குப் பதிவு செய்து இருக்கிறார்கள். சோலார் பேனல் அமைக்க முதலீட்டாளர்களிடம் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி பணம் பெற்றார். என்னிடமும் உம்மன்சாண்டி பணம் பெற்று ஏமாற்றினார். சோலார் பேனல் கமிஷனின் அறிக்கை, அடுத்த மாத இறுதியில் வெளிவரும் என எதிர்பார்க்கிறேன்.
இந்த அறிக்கை, கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டிக்கு எதிராக அமைவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. 90 சதவீதம் இது உம்மன்சாண்டிக்கு எதிராகத்தான் இருக்கும். இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள், என்ற நம்பிக்கை இருக்கிறது.
என்னுடைய வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் நான் சுயசரிதையாக எழுதி வருகிறேன். அதில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட அனைவரது பெயர், விவரங்கள் இடம்பெறும். ஒரு துளி கூட பொய் இல்லாமல் முழு உண்மையை உலகுக்கு தெரியப்படுத்தும் வகையில் இருக்கும்.
இந்த வழக்கில் இடம்பெற்றுள்ள எல்லோருடைய பெயரும் அதில் இடம்பெறும். இந்த வழக்கில் தமிழகத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் இடம்பெற்று உள்ளார்களா என கேட்கிறீர்கள். தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம் பெயர் இடம்பெற்றுள்ளது. தொழில் சார்ந்து, என்னுடைய க்ளையன்ட் ஒருவரிடம் வருமான வரிப் பிரச்னையை தீர்க்க பழனிமாணிக்கம் லஞ்சம் பெற்றார். அது குறித்து சோலார் பேனல் மோசடியை விசாரிக்கும் கமிஷனில் எழுத்து மூலம் தெரிவித்திருக்கிறோம். மற்றபடி தமிழகத்தில் வேறு யாருடைய பெயரும் இல்லை.
தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். ஒரு தமிழ் படத்திலும், 4 மலையாள படத்திலும் நடிக்கவிருக்கிறேன்.'' என்று தெரிவித்தார்.
சோலார் பேனல் வழக்கில், தமிழக அரசியல் கட்சியின் முக்கிய பிரமுகர் பெயர் அடிபடுவதாக வந்த தகவல் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.