சக் தே இந்தியா படத்தில் ஷாருக்கான் சத்தர் மினிட் என்று தனது டீமுடன் தன் உரையைத் துவங்குவார். அந்த டீம் மீட் அனைவரையும் புல்லரிக்க வைக்கும் விதமாக இருக்கும். இந்த 70 நிமிடத்தில் டீம் இந்தியா உலகக் கோப்பையை வென்றே ஆகவேண்டும் என்று அவரது பேச்சு அமைந்திருக்கும். அவ்வளவு உற்சாகமான உரையை நேரடியாக நிகழ்த்தியுள்ளார் நம்ம கேப்டன் கூல் தோனி.
இந்திய அணியின் ரோட் மேப் மீட்டிங், வீரர்களுடனான கலந்துரையாடல், புதிய கோச் வருகை என பிஸி ஆபீஸ்போல் இயங்கும் இந்திய அணியின் பயிற்சிக்கு நடுவே ஒரு ஃபன் மீட்டிங்கும் இடம் பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்ட இந்திய ஒருதின மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டன் தோனி, வீரர்களிடம் உரையாற்றினார். அந்த உரை 'சக் தே' இந்தியாவில் ஷாருக்கான் நடத்திய உரையை ஞாபகப்படுத்தியது.

தோனி பேசும்போது '' இதுவரை இந்தியாவில் நல்ல டெஸ்ட் ஆடும் பேட்ஸ் மேன்களை, பந்து வீச்சாளர்களைத் தேடி வந்தோம். இப்போது அதற்கான சரியான டெஸ்ட் வீரர்களை அடையாளம் கண்டு விட்டோம் என நினைக்கிறேன். இப்போது உள்ள வீரர்கள் இன்னும் ஒரு வருடத்தில் 17 டெஸ்ட் போட்டிகளை விளையாட இருக்கிறார்கள். இதில் சிறந்த பேட்ஸ்மேன்கள், சிறந்த பந்துவீச்சாளர்கள் என குழுவாக செயல்படுவது அவசியம். இதில் அனைவரும் தங்களை நிருபிக்க வேண்டும்" என்றார்.
மேலும் "நமது வாழ்க்கையில் கிரிக்கெட்டை தவிர்த்தால் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் எப்போதும் கிரிக்கெட்...கிரிக்கெட் என்றே இருக்கிறோம். இனி வரப்போகும் 45 நிமிடங்கள் இங்கு கிரிக்கெட் இருக்காது. முழுமையான மகிழ்ச்சியை வெளிப்படுத்துவோம். உலகிலேயே நாம் தான் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறோம் எனும் அளவுக்கு ஜாலியாக இருங்கள்" என்றார்.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி இன்னும் டெஸ்ட் போட்டிகளின் மீது கவனமும், டீம் இந்தியாவுக்கு அறிவுரைகளையும் வழங்குவது அவரது தலைமை பண்பை மேலும் ஒரு படி அதிகரிக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இந்திய டெஸ்ட் கேப்டன் கோலியும் கலந்து கொண்டார். அவரது ஆக்ரோஷம் குறித்து புதிய கோச் கும்ப்ளே பாரட்டியதும் குறிப்பிடத்தக்கது. இந்த பயிற்சி முகாமுக்கு பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் கிளம்புகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.