ஓய்வு வயதை எட்டியிருக்கும் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிரேட் மெக்டர்மார்ட் தொடங்கியிருக்கும் சர்வதேச கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளர் மற்றும் விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய முன்னாள் பந்துவீச்சாளர் கிரேக் மெக்டர்மார்ட் தொடங்கியுள்ள 'கிரேக் மெக்டர்மாட் கிரிக்கெட் அகாடமி ' சார்பில், 'ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட்' என்ற பெயரில் 4 வருட பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஐடியா தோனியை கவர, அந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசடராக செயல்பட ஒப்புக் கொண்டுள்ளார். விளையாட்டில் ஈடுபாடு கொண்ட குழந்தைகளை, கல்வி மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டிலும் சரிவிகிதமாக கவனத்தை செலுத்தும் வகையில், இந்த அகாடமி இயங்கவுள்ளது.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தோனி, '' எனக்கு எல்லாம் அளித்த கிரிக்கெட் விளையாட்டுக்கு, இந்த அகாடமி மூலம் என்னால் திரும்ப ஏதாவது செய்ய முடியுமென்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது'' என்றார்.
மெக்டர்மார்ட் கூறுகையில், ''உலகின் பல இடங்களில் கிரிக்கெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது இருக்கிறது. இதுபோன்ற ஒரு அகாடமி ஏற்படுத்தப்பட்டால், அதனை நிர்வகிப்பதற்கும் தூதுவராக நியமிக்கப்படுவதற்கும் தோனிதான் எனக்கு சரியான ஆளாக தெரிந்தார். அவருக்கு எங்கள் அகாடமியின் மீதும், அதன் செயல்பாட்டின் மீதும் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அதனாலேயே எங்கள் அகாடமிக்கு துணை நிற்கவும் அவர் ஒப்புக் கொண்டார் '' என தெரிவித்தார்.
இந்தியாவிலும் இது போன்ற ஒரு அகாடமியை தோனி அறக்கட்டளை மூலம் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ஓய்வு வயதை நெருங்கியிருக்கும் தோனி, வருங்காலத்தில் பயிற்சியாளராக மாறுவதற்கு இந்த அகாடமி வித்திட்டுள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.