Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 14, 2016

36 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் 200 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர்


ஒலிம்பிக் 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில்,  36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வீரர் ஒருவர் பங்கேற்கவுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில்,  தேசிய அளவிலான தடகளப் போட்டி நடந்து வருகிறது. அதில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், ஹரியானாவைச் சேர்ந்த 27 வயதான தரம்பீர் சிங், 20.45 வினாடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்தார்.  ஒலிம்பிக்கிற்கு தகுதிப் பெற வேண்டுமென்றால்,  200 மீட்டர் ஓட்டத்தை 20.50 வினாடிகளுக்குள் கடக்க வேண்டும்.

கடந்த 36 ஆண்டு கால ஒலிம்பிக்  வரலாற்றில்,  200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கப் போகும் இந்திய வீரர் என்ற பெருமையை தரம்பீர் சிங்  பெற்றார். இதற்கு முன்  மாஸ்கோ ஒலிம்பிக்கில், சுப்ரமணியம் பெருமாள் என்பவர்  200 மீட்டர் ஓட்டத்திற்கு தகுதிப் பெற்றிருந்தார். ஆனால் அவர் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டார்.

மும்முறைத் தாண்டும் போட்டியில்  கேரளாவைச் சேர்ந்த 30 வயதான ரெஞ்சித், 17.30 மீட்டர்  தாண்டி  தேசிய சாதனை படைத்தார். அத்துடன் மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். ஏற்கனவே ரெஞ்சித், காமன்வெல்த் போட்டியில் வெண்கலமும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கமும் வென்றுள்ளார்.அதேபோல் கேரளத்தை சேர்ந்த மற்றொரு தடகள வீரர் ஜின்சன் ஜான்சன், ஒலிம்பிக்கில் 800 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்கப் போகிறார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.