டியூசன் சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லையே எனும் கவலையில் இருந்த பெற்றோருக்கு, அவன் இறந்து போனான் எனும் தகவல் தலையில் இடி இறக்கியது. ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த ரஜாத் மேனன்(15), புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு எப்போதும் போல டியூசன் படிக்கச் சென்றான். மணி 9 ஆகியும் ரஜாத் வீடு திரும்பாததால் பெற்றோர் கவலையில் ஆழ்ந்தனர். இதற்கிடையே, ரஜாத்தின் பெற்றோரை தொடர்பு கொண்ட அவனது நண்பர்கள், பான் மசாலா கடைக்காரர் தாக்கியதில் ரஜாத் இறந்து போனான் எனக் கூறினர். இதனால் திடுக்கிட்ட, பெற்றோர், உடனடியாக இது பற்றி போலீசில் புகார் அளித்தனர்.
சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்த போலீசார் அங்கு விசாரணை நடத்தினர். விசாரணையில், இரண்டு நண்பர்களுடன் பான் கடை நோக்கி ரஜாத் செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. ஆனால் அங்கு தகராறு எதுவும் நடந்தது கேமராவில் பதிவாகவில்லை. இதனால் போலீசார் குழம்பி உள்ளனர்.
இதற்கிடையே, ரஜாத்துக்கும் பான் கடைக்காரருக்கும் மோதல் ஏற்பட்டதாக அவனது நண்பர்கள் போலீசில் கூறினர்.
ரஜாத்தின் நண்பர்கள் கூறியது: மோதல் அதிகரித்து, பான் கடைக்காரருடன் வேறு சிலர் சேர்ந்து, ரஜாத் மீது தாக்குதல் தொடுத்தனர். அதில் ரஜாத் நிலைகுலைந்து பேச்சு, மூச்சில்லாமல் விழுந்தான். இதனால் திடுக்கிட்ட கடைக்காரர், ரஜாத்தை அருகிலிருந்த மாலிக் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அங்கு மருத்துவ வசதி இல்லாததால், மெட்ரோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ரஜாத் ஏற்கனவே இறந்து விட்டான் என அங்கிருந்த மருத்துவர்கள் கூறியதை நம்பாமல், மூன்றாவதாக இன்னொரு மருத்துவமனைக்கு சடலத்துடன் சென்றனர். இதற்கிடையே, ரஜாத்தின் பெற்றோருக்கு தகவல் அளித்தோம் என்றனர்.
ரஜாத்தின் மர்மமான மரணத்தில், தகராறு நடந்தது உண்மைதானா? அல்லது நடந்தது என்ன? என்பது பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் தெரிய வரும் என போலீசார் கூறியுள்ளனர். ரஜாத் உடலில் வெளி காயங்கள் காணப்படவில்லை என மருத்துவர்கள் கூறியிருப்பது, குழப்பத்தை அதிகப்படுத்தி உள்ளது. சம்பவம் தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.