தன்னுடைய மகள் ஆண் நண்பர் ஒருவருக்கு பொது இடத்தில் முத்தம் கொடுத்ததால், அவருக்கு மொட்டையடித்து நான்கு ஆண்டுகளக வீட்டு சிறையில் வைத்திருந்திருக்கிறார் கொடூர தந்தை ஒருவர்.
அமீனா அல் ஜெப்ரி என்ற 21 வயதான இந்த இஸ்லாமிய பெண் இங்கிலாந்து மற்றும் சவுதி அரேபியா நாடுகளின் குடியுரிமையை பெற்றவர். இவர் இங்கிலாந்தில் இருந்த போது தன்னுடன் பழகிய ஆண் நண்பர் ஒருவருக்கு பொது இடத்தில் முத்தம் கொடுத்துள்ளார்.
இதனை தெரிந்து கொண்ட அவரது தந்தை அவரை சவுதி அரேபியா அழைத்துக்கொண்டு போய், அவருக்கு மொட்டை அடித்து, கை, கால்களில் சங்கிலி மாட்டி அவரை ஒரு அறையில் அடைத்து வைத்திருந்திருக்கிறார். ஒரே ஒரு வேளை உணவு மட்டுமே அவருக்கு அளித்து வந்துள்ளார்.
நான்கு ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த கொடுமை அமீனாவின் சகோதரி மூலம் தெரியவந்து அவர் மீட்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் தனது மகளை வீட்டுச்சிறையில் வைக்கவில்லை என மறுத்துள்ளார்.
லண்டன் நீதிமன்றத்தில் அமீனா அவரது தந்தை மீது புகார் அளித்துள்ளார். அதன்படி அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.