மும்பையை போல சென்னையிலும் ‘டப்பாவாலா’ தொழில் பிரபலம் அடைந்து வருகிறது.
வர்த்தக மையம்
19–ம் நூற்றாண்டின் இறுதியில், இந்தியாவில் வளர்ந்து வரும் வர்த்தக மையமாக தற்போதைய மும்பை நகரம் விளங்கியது. அதனால், பணி நிமித்தமாக நகருக்கு வெளியே இருந்து ஆங்கிலேய வியாபாரிகளும், இந்திய வியாபாரிகளும் மும்பை நகருக்கு வந்து சென்றனர்.
அப்போதைய சூழ்நிலையில், நகருக்குள் ஓட்டல்கள் என்பது குறைவான அளவிலேயே இருந்தது. இதனால், காலை நேரத்திலேயே வீட்டில் இருந்து புறப்பட்டு வந்த வியாபாரிகள் சரியாக சாப்பாடு கிடைக்காமல் சிரமப்பட்டனர்.
‘டப்பாவாலா’ தொழில்
அந்த நேரத்தில் புத்திசாலித்தனமாக தொடங்கப்பட்ட தொழில் தான் ‘டப்பாவாலா’. இதை தொடங்கியவர் யார் என்பது இன்று வரை தெரியவில்லை. மும்பையில் தொடங்கப்பட்டதால், இந்த தொழிலுக்கு இந்தியில் பெயர் வைக்கப்பட்டாலும், தமிழில் இதை ‘சாப்பாட்டை சுமந்து செல்பவர்’ என்று எடுத்துக்கொள்ளலாம்.
‘டப்பாவாலா’ என்பவர், பணிக்கு செல்லும் ஊழியர்களுக்கு, அவர்களின் வீடுகளில் இருந்து மதிய உணவை வாங்கி கொண்டு வந்து, அவர்களது அலுவலகத்தில் அளிப்பார். அந்த காலத்தில் இந்த தொழிலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
உணவு கட்டுப்பாடு
இப்போது, நகரங்களில் ஓட்டல்கள் அதிகரித்து விட்டது என்றாலும், வீட்டு சாப்பாட்டிற்கு உள்ள மவுசு குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். காரணம், இப்போதைய சந்ததியினருக்கு உடல் உபாதைகள் அதிகம். எனவே, உணவு கட்டுப்பாடு என்பது அவர்களுக்கு இன்றியமையாததாகி விடுகிறது. அவர்கள் வீட்டு உணவே சிறந்தது என்று கருதுகின்றனர்.
அதனால் தான், மும்பை நகரத்தில் ‘டப்பாவாலா’ தொழில் கொடிகட்டி பறக்கிறது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், 16 லட்சம் பேருக்கு தினமும் மதிய உணவு எடுத்து சென்று வழங்கி வருகின்றனர். இந்த வகையில் தினமும் 120 டன் உணவுப் பொருள் கையாளப்படுகிறது.
3–வது தலைமுறை
மும்பையில் பிரபலமான ‘டப்பாவாலா’ தொழில், சென்னையிலும் 50 ஆண்டுகளுக்கு மேலாக தங்குதடையின்றி நடந்து வருகிறது. அதுவும் இந்த தொழிலை அண்ணா நகரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 3–வது தலைமுறையாக சப்தமின்றி செய்து வருகின்றனர்.
சென்னை அண்ணா நகரில் உள்ள சத்யா நகர் ஓ–பிளாக்கில் வசிக்கும் தம்பதி கணேசன் (வயது 68) – ராணி (63) ஆகியோர் இந்த ‘டப்பாவாலா’ தொழிலை 20 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருகின்றனர். இப்போது அவர்களுக்கு பக்கபலமாக அவரது 4 மகன்கள்–மருமகள்களும், 2 மகள்கள்–மருமகன்களும், பேரக்குழந்தைகளும் இருந்து இந்த தொழிலை தொய்வின்றி கவனித்து வருகின்றனர்.
ஏரியா வாரியாக பிரிப்பு
அண்ணாநகர், அரும்பாக்கம், அமைந்தகரை, சூளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் சாப்பாட்டை வீடு தேடிச்சென்று சுடச்சுட எடுத்து வரும் இவர்கள், வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் உள்ள ஒரு மரத்தடிக்கு ஒன்றாக கொண்டுவந்து வைக்கின்றனர்.
பின்னர், ஏரியா வாரியாக சாப்பாட்டு பாத்திரங்களை பிரித்து, அங்கிருந்து ஆட்டோ, மோட்டார்சைக்கிள்களில் புரசைவாக்கம், வேப்பேரி, அண்ணாசாலை, பாரிமுனை, பிராட்வே, சவுக்கார்பேட்டை, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்.
இந்தப் பணியில் விறுவிறுப்பாக இருந்த ராணி, அதற்கு மத்தியில் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:–
50 ஆண்டுகளுக்கு முன்..
இந்த தொழிலை எனது மாமியார் மாணிக்கம்மாள் 50 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கினார். அப்போது, பெரம்பூர் சிம்சன் ஆலையில் வேலை செய்தவர்களுக்கு, அவர்களின் வீடுகளுக்கு சென்று மதிய உணவை வாங்கிச் சென்று கொடுப்பார். அதற்கு காலணா, அரையணா கூலி கிடைத்தது.
பின்னர், அவரது மகனை (கணேசன்) நான் திருமணம் செய்துகொண்ட பிறகு, தொழிலை விரிவுபடுத்தினோம். பின்னி மில் தொழிலாளர்களுக்கு, அவர்களது வீடுகளில் இருந்து சாப்பாட்டை பஸ்சில் எடுத்து சென்று கொடுப்போம். அதற்கு கூலியாக ஒவ்வொருவரிடமும் மாதம் ரூ.3 பணம் வாங்கினோம்.
300 பேருக்கு உணவு
இப்போது, எங்கள் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் இந்த தொழிலில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். நாங்கள் சொந்தமாக 2 ஆட்டோ வைத்துள்ளோம். அந்த ஆட்டோ மூலமும், மோட்டார் சைக்கிள்களிலும் தினமும் சுமார் 300 பேருக்கு சாப்பாட்டை எடுத்துச் சென்று கொடுக்கிறோம். காலை 11.30 மணிக்கு குறிப்பிட்ட வீடுகளுக்கு செல்லும் நாங்கள், அங்கு தயாராக இருக்கும் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு, வேப்பேரியில் மதியம் 1 மணிக்கு கூடுவோம்.
உடனடியாக ஏரியா வாரியாக சாப்பாடு பாத்திரங்களை பிரித்துக்கொண்டு, சற்று நேரத்திலேயே அங்கிருந்து பிரிந்து சென்றுவிடுவோம். மதியம் 2 மணிக்குள் உரியவர்களிடம் சாப்பாட்டை கொடுத்துவிடுவோம். பின்னர், மாலை 4 மணிக்கு காலி பாத்திரங்களை திரும்ப பெற்று உரியவர்கள் வீடுகளில் சென்று கொடுப்போம்.
தூய்மை இந்தியா திட்டம்
பாத்திரங்களுக்கு என்று தனியாக நாங்கள் அடையாளம் வைத்துக்கொள்வது இல்லை. என்றாலும், எந்த பாத்திரம் எந்த வீட்டில் இருந்து எடுத்துவரப்பட்டது என்பதை எளிதாக ஞாபகம் வைத்திருப்போம். சாப்பாட்டை எடுத்து சென்று வழங்குவதற்காக மாதக் கட்டணம் ரூ.300 வசூலிக்கிறோம். காலி சாப்பாடு பாத்திரத்தை திருப்பி எடுத்துச்சென்று வீட்டில் கொடுப்பதாக இருந்தால் ரூ.400 கட்டணம் வாங்குகிறோம். ஞாயிறு ஒரு நாள் மட்டும் எங்களுக்கு விடுமுறை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவில் ‘டப்பாவாலா’ தொழில் ஆண்டுக்கு 5 முதல் 10 சதவீதம் வரை வளர்ச்சி பெற்று வருகிறது. மராட்டிய மாநிலத்தில் தவிர்க்க முடியாத சக்தியாகவே ‘டப்பாவாலா’ தொழில் உள்ளது. இதனால், தூய்மை இந்தியா திட்டத்தை பிரபலப்படுத்த, அது சம்பந்தமான வாசகங்களை ‘டப்பாவாலா’ பாத்திரங்களில் அச்சிட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.