Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 7, 2016

கஷ்டம் பாஸ் கஸ்டமர்ஸ்!


நாம் பொருள் வாங்குறப்போ ‘அம்மா’வைப் பார்க்கவரும் அமைச்சர்கள் போல் பம்மும் கஸ்டமர் கேர் ஊழியர்கள், அதே பொருளுக்கு ஒரு பிரச்னைனு போய் நிற்கிறப்போ அந்த மம்மியாவே மாறிடுவாங்க. அப்படிப்பட்ட நிகழ்வுகள் சில...

புதுசா வாங்கின மொபைல், அக்னிக்குழம்பா கொதிக்கும். நாம அதை வாங்கி முழுசா ரெண்டுநாள்கூட உபயோகப்படுத்தி இருக்க மாட்டோம். என்னங்க இப்படி கொதிக்குதுனு கேட்டா, மொபைலைக் கொடுங்கனு வாங்கி ஒரு வாரம் வெச்சு இருந்து திருப்பிக் கொடுப்பாங்க. மறுபடியும் கொதிக்கும். மறுபடியும் ஒரு வாரம். நம்ம மொபைலை நாம் ரெண்டு நாள் பயன்படுத்துவோம். இவங்க ஒரு வாரம் பயன்படுத்துவாங்க.

நம்மை 24 மணி நேரமும், தொடர்புகொள்ள முடியற ஒரே ஆள், தொலைத்தொடர்பு கஸ்டமர் கேர் ஊழியர்கள்தான். ஆனா, நம்ம மொபைல்ல 30 ரூபாயை என்ன காரணம்னே சொல்லாம எடுத்துடுவாங்க. நாம, அவங்களுக்கு போன் பண்ணணும்னு நினைக்கிறப்போ எப்போதும் அவங்க தொடர்பு எல்லைக்கு வெளியேதான்.

நம்ம டெபிட் கார்டுல 1,000 ரூபாய்தான் வெச்சுருப்போம். கொஞ்சம்கூட இரக்கம் இல்லாம ஏதொவொரு காரணம் சொல்லி, அதுல 200 ரூபாயைப் பிடிச்சுடுவாங்க. கடுப்பாகி அவங்களுக்கு கால் பண்ணினா, எண் ஒன்றை அழுத்தவும், கார்டு நம்பர், மொபைல் எண், பான் நம்பர், வீட்டு முகவரி எல்லாத்தையும் அழுத்தவும்னு சொல்லுவாங்க. எல்லாத்தையும் சரியா அழுத்திட்டோம்னா, எல்லாம் சரியாகத்தான் எடுத்து இருக்கோம்னு ஒரு காரணம் சொல்லுவாங்க பாருங்க, கமல் படம்கூட புரிஞ்சுடும் பாஸ்.

ரெண்டு கிலோமீட்டர் தள்ளி இருக்கிற கடைக்குப் போய் வாங்க சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு, ஆன்லைன்ல ஒரு பொருள் வாங்குவோம். நாம குளிர்காலத்துக்கு ஸ்வெட்டர் வாங்கினா, பங்குனி வெயில் பல்லைக்காட்டி அடிக்கும்போது வந்து, ‘ஸாரி சார், கொஞ்சம் லேட் ஆயிடுச்சு’னு ஸ்வெட்டரைக் கொடுப்பாங்க.

பெட்ரோல் இருந்தும், நம்ம வண்டி ஸ்டார்ட் ஆகலைனா நாம வண்டியை வாங்கின கடைக்காரருக்கு நல்ல நேரம்னு அர்த்தம். வண்டில ஒரு பிரச்னையும் இல்லை, சின்னதா ஒரு பிராப்ளம், சரி பண்ணிடலாம்னு சொல்லி வண்டியை வாங்குவாங்க. அப்புறம் பிரேக் வொயர்ல பிரச்னை, அதை ரெடி பண்ணும்போது கிளட்ச் பிளேட்லயும் பிராப்ளம் இருந்துச்சு, அப்புறம் வந்துபோன செலவுன்னு, 1,010 ஆச்சு, நீங்க 1,000 கொடுங்க போதும்னு, தங்களை தியாகி ரேஞ்சுக்கு ஃபீல் வேற பண்ணுவாங்க!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.