Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 9, 2016

குழந்தைகளுக்கு விருப்பமான ஃப்ரூட் தயிர் சாதம்


தேவையான பொருட்கள் :

சாதம் - 250 கிராம்,
ஆப்பிள், மாதுளம் பழம் -  தலா ஒன்று,
திராட்சைப் பழம் -  100 கிராம்,
கேரட் துருவல் - ஒரு கப்,
புளிக்காத தயிர் - 2 கப்,
உப்பு - சிறிதளவு.

செய்முறை :

* திராட்சை, ஆப்பிளையும் பொடியாக நறுக்கவும்.

* மாதுளையை முத்துகளாக உதிர்த்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் சாதத்தை போட்டு நன்றாக மசிக்கவும். பின்னர் அதனுடன் உப்பு, தயிர் சேர்த்து நறுக்கிய பழங்களையும், கேரட் துருவலையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

* இப்போது கலர்புல் ஃப்ரூட் தயிர் சாதம் ரெடி!

குறிப்பு: தயிர்சாதம் சாப்பிடாமல் அடம் பிடிக்கும் குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். புளிக்காத தயிரை தான் இந்த சாதத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.