Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 7, 2016

மாட்டிறைச்சித் தடைக்கும் கிரிக்கெட் பந்து விலைக்கும் என்ன தொடர்பு?


மாட்டிறைச்சிக்கு பெரும்பாலான மாநிலங்கள் தடை விதித்திருப்பதால், மாட்டுத் தோலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் கிரிக்கெட் பந்தின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.      

இந்தியாவில் உத்தரபிரதேசம், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் இறைச்சிக்காக மாட்டை வெட்டினாலோ அல்லது மாட்டிறைச்சி விற்றாலோ 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். ஆந்திரா, தெலங்கானா, அஸ்ஸாம், பீகார், சண்டிகார்,கர்நாடகா,மகாராஷ்ட்ரா, மிசோராம் போன்ற பெரும்பாலான மாநிலங்களில் இந்த தடை இருக்கிறது. ஆனால் தண்டனைக் காலம் குறைவு. கேரளா, மேற்கு வங்கம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் மட்டுமே தற்போது மாட்டிறைச்சிக்குத் தடையில்லை.

மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையால், மாட்டுத்தோலின் தேவை அதிகரித்துள்ளது.பெரும்பாலான விளையாட்டுகளில் பயன்படும் பந்துகள் மாட்டுத் தோலில் இருந்துதான் தயாரிக்கப்படும். முக்கியமாக கிரிக்கெட் பந்து தயாரிக்க மாட்டுத்தோல்தான் அதிகமாக பயன்படும். மாட்டுத் தோல் தட்டுப்பாடு காரணமாக  விளையாட்டு உபகரணங்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்கள் நிறைந்துள்ள ஜலந்தரில், ஏராளமான தொழிற்சாலைகள் தடுமாற்றத்தை சந்தித்து வருகின்றன.
             
இங்குள்ள பெரிய நிறுவனங்கள், தற்போது இங்கிலாந்தில் இருந்து தோல் பொருட்களை இறக்குமதி செய்கின்றன. இதற்கு இறக்குமதி வரி உள்ளிட்ட பல வரிகள் விதிக்கப்படுவதால், கிரிக்கெட் பந்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 400 ரூபாய்க்கு விற்ற கிரிக்கெட் பந்து,  இந்த ஆண்டு 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சிறிய நிறுவனங்கள் மாட்டிறைச்சியை கடத்துபவர்களின் உதவியை நம்பிருந்தன. தற்போது அவர்களும் கடும் சவாலை சந்திக்க வேண்டியது இருக்கிறது. மாட்டிறைச்சி கடத்துபவர்கள் தாக்கப்படுவதால், அதில் ஈடுபடுபவர்களும் தொழிலை மாற்றி வருகின்றனர். இதனால் சிறிய நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன.

இதற்கு முன் 600 முதல் 700 ரூபாய்க்கு கிடைத்து வந்த மாட்டுத் தோல் ஷீட், தற்போது ரூ. 2,500  வரை விற்கப்படுகிறது. எனினும் சில நிறுவனங்கள் எருமைத் தோலை பயன்படுத்தி பந்து தயாரிப்பில் ஈடுபடுகின்றன. ஆனால் எருமைத் தோலில் கிரிக்கெட் பந்துக்கேற்ற தடிமன் கிடைப்பதில்லை அதேபோல், alum tanning என்ற பந்தை உருண்டையாக மாற்றும் செயல் முறையிலும் எருமைத் தோல் உகந்ததாக இல்லை. ஒரு மாட்டுத் தோல் ஷீட்டில் இருந்து 10 கிரிக்கெட் பந்துகள் தயாரித்தால், எருமைத் தோல் ஷீட்டிலிருந்து  6 பந்துகள்தான்  தயாரிக்க முடியுமாம்.

இதனால் கிரிக்கெட் பந்தின் விலை வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.