உங்கள் குழந்தைகள் தவழும்போது மறக்காமல் அதை புகைப்படம் பிடித்து பத்திரமாக வைத்து கொள்ளுங்கள்.
வீட்டை அடிக்கடி சுத்தம் செய்வது முக்கியமானது. குறிப்பாக தினமும் தவறாமல் வீட்டுத் தரையை நன்கு கூட்டி, தண்ணீர் கொண்டு துடையுங்கள். இதனால் குழந்தை தரையில் தவழும் போது, கையை வாயில் வைத்தாலும் எந்த ஒரு நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் இருக்கும்.
தவழும் குழந்தையை எப்போதும் படுக்கை அறையில் உள்ள கட்டிலில் தனியாக விடக்கூடாது. அப்படிவிட்டால், எவ்வளவு தான் தலையணையை அவர்களைச் சுற்றி வைத்தாலும், அவர்கள் அதனை தாண்டி விழுந்துவிடுவார்கள்.
உங்கள் குழந்தை தவழ ஆரம்பிக்கும் போது, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நல்ல வண்ணமயமான பொருளை அவர்களின் பார்வைக்கு எட்டும் தூரத்தில் வைத்துவிட்டு, அவர்களை எடுக்கச் சொல்லுங்கள். இதனால் அவர்கள் குதூகலத்துடன் சந்தோஷமாக தவழ்வார்கள்.
குழந்தை தவழ ஆரம்பித்தால் அவர்கள் நடப்பதற்கு பயிற்சி கொடுங்கள், இதனால் அவர்கள் விரைவில் நடக்க ஆரம்பித்து விடுவார்கள்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.