பிளஸ் 2 படிக்கும் நண்பருக்காக ஆள் மாறாட்டம் செய்து கணித தேர்வெழுதிய கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேளச்சேரியை சேர்ந்தவர் ராமு (18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் 2014-15ல் நடந்த பொதுத் தேர்வில் கணித பாடத்தில் தோல்வி அடைந்தார். அதைத் தொடர்ந்து 2015-16ம் ஆண்டு நடந்த தேர்விலும் தோல்வி அடைந்தார். இதனால், விரக்தி அடைந்த அவர் இதுகுறித்து தன்னுடன் படித்தவரும் தற்போது பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வரும் கேளம்பாக்கத்தை சேர்ந்த குமரேசன் (18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரிடம் முறையிட்டுள்ளார்.
இதைக் கேட்டு பரிதாபப்பட்ட குமரேசன், ‘உனக்காக நான் தேர்வெழுதுகிறேன்’ என்று கூறி நேற்று முன்தினம் நடந்த கணித துணைத் தேர்வை சைதாப்பேட்டையில் நடந்த பள்ளி ஒன்றில் எழுதினார். இதை பள்ளி தலைமை ஆசிரியர் பொன்னியம்மாள் கண்டுபிடித்தார். தொடர்ந்து இதுகுறித்து குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிந்து நண்பர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.