பயிற்சியாளர் கவனக்குறைவால் எங்களுக்கு இந்திய சீருடை வழங்கப்படாமல் வீராங்கனைகள் பலர் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனதாக துருக்கியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தமிழகம் திரும்பிய வீராங்கனைகள், வேதனை தெரிவித்து உள்ளனர்.
சர்வதேச அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையே நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் துருக்கியில் உள்ள டிராப்சோன் நகரில் கடந்த 11-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டிகளில், தமிழ்நாடு பிரிவில் 10 மாணவ-மாணவிகள் உள்பட இந்தியாவில் இருந்து 149 பேர் கலந்துகொண்டனர்.
விளையாட்டு போட்டிகள் நடந்த சமயத்தில், துருக்கியில் ராணுவ புரட்சி ஏற்பட்டு குண்டுவெடிப்பு மற்றும் கலவரங்கள் நடைபெற்றன. இதனால், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்து கவலை கொண்டனர். அவர்களது வேண்டுகோளின்படி இந்திய வீரர்களை பாதுகாப்பாக தாயகத்திற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 149 பேரும் நேற்று துருக்கியில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். அதன் பின்னர், அங்கிருந்து தமிழகத்தை சேர்ந்த தமிழ்செல்வி, பிரியதர்ஷினி, ஹேமமாலினி, சான்ட்ரா பெரோசா மார்ட்டின், அஷீத்குமார், நவீன், பூபேஷ்வர், மணிராஜ் ஆகிய 8 பேர் விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்து சேர்ந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் அஷீத்குமார், ''துருக்கியில் குண்டுவெடிப்பு சம்பவங்களால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. குண்டுவெடித்த இடத்திற்கும் போட்டிகள் நடந்த இடத்திற்கும் சுமார் 800 கி.மீ. தூரம் இருந்தது. எங்களுக்கு நல்ல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் விளையாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு இந்திய சீருடைகள் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் இருந்தன. இதனால் நிறைய பேர் பங்கேற்க முடியாமல்போனது. வருங்காலத்தில் இந்த குறைகள் ஏற்படாமலிருக்க விளையாட்டுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் வருத்தத்துடன்.
இன்னொரு வீராங்கனையான சான்ட்ரா பெரோசா மார்ட்டின் கூறும்போது, ''கடந்த முறை இந்திய பெண்கள் அணிக்கு இந்திய சீருடைகள் வழங்காததால் பாதிக்கப்பட்டனர். எனவே இந்த முறை டெல்லியில் பயிற்சியில் இருந்தபோதே இந்திய சீருடைகள் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என பயிற்சியாளர்களிடம் பலமுறை தெரிவித்தோம். அவர்கள் துருக்கியில் உரிய சீருடைகள் கிடைக்கும் என தெரிவித்தனர். ஆனால் போட்டிகள் தொடங்கும் வரை எங்களுக்கு இந்திய அணியின் சீருடை வழங்கப்படாததால் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
இதனால் நான், தமிழ்செல்வி, கேரளாவை சேர்ந்த ரோஸ்லின், கோவையை சேர்ந்த சமயஸ்ரீ ஆகியோர் ஓட்டப்பந்தய போட்டியில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. இந்த போட்டிக்காக ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்து உள்ளோம். பயிற்சியின்போது நாங்கள் சிறப்பாக ஓடினோம். நாங்கள் பங்கேற்காததற்கு இந்திய விளையாட்டுத் துறையின் கவனக்குறைவுதான் காரணம். நாங்கள் கலந்து கொண்டு இருந்தால் நிச்சயம் ஒரு பதக்கத்தையாவது வென்று இருப்போம்" என்றார் வேதனையுடன்.
விளையாட்டுத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்திய பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்திருப்பது விளையாட்டு ஆர்வலர்களிடையேயும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.