Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 6, 2016

வாயை மூடு - முல்லா கதை


முதன் முறையாக தலைநகருக்குத் திரும்பிய முல்லாவை
ஊர்மக்கள் சூழ்ந்துகொண்டு ''அரண்மனைக்குச் சென்றீர்களா,
அரசரைப் பார்த்தீரகளா? அரசரோடு பேசினீர்களா?'' இவ்வாறு
ஆளுக்கொரு கேள்வியாக கேட்டார்கள்.
-
'அரண்மனைக்குப் போனேன். அதில் எந்தவித கஷ்டமும்
இல்லை. மன்னரைப் பார்த்தேன் அவருடன் பேசினேன்.
என்னைப் பற்றியும் நமது ஊரைப்பற்றிய விபரங்களையும்
எடுத்துக் கூறினேன். மன்னர் மற்றவர்கள் பேசும்போது
வெறுமனே கேட்டார். அல்லது தலையை ஆட்டினார்.
ஆனால், நான் பேசியபோதோ, மன்னர் வாயைத் திறந்து
பேசினார்''
-
இவ்வாறு ஊர்மக்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம்
முல்லா பதில் கூறினார்.
-
இதைக்கேட்ட மக்கள் வியப்பால் ஆரவாரம் செய்தனர்.
-
ஆரவாரம் அடங்கியதும், கூட்டத்தினரில் ஒருவன்,
''முல்லா, உங்களுடன் அரசர் என்ன பேசினார்?'' என்று
கேட்டான்.
-
அதைக்கேட்ட முல்லா, சூழ்ந்து நின்றவர்களை ஒருமுறை
பெருமையுடன் பார்த்துவிட்டு, ''மன்னர் என்ன கூறினார்
தெரியுமா? 'வாயை மூடு' என்று கூறினார்'' என்று சொன்னார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.