கடந்த பிப்ரவரி மாதம் வரை சென்னைதான் இந்தியாவின் பாதுகாப்பான நகரம். குறிப்பாகப் பெண்களுக்கு சென்னை சொர்க்க பூமி என்று சர்வதேச ஆய்வு நிறுவனமான மெர்சர் சொன்னது. 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை உலகம் முழுக்க 230 நகரங்களில் மெர்சர் நிறுவனம் ஆய்வு நடத்தியது. அதில் சர்வதேச அளவில் சென்னைக்கு 113வது இடம் கிடைத்தது.
இந்தப் பட்டியலில் இந்தியாவில் சென்னைக்குப் பின்னரே மற்ற மாநகரங்களான ஹைதரபாத், மும்பை, பெங்களுரு, டெல்லி போன்றவை இடம் பெற்றிருந்தன. இதே நிறுவனம் நடத்திய மக்கள் வாழ ஏற்ற நகரம் அதாவது, சிறந்த மருத்துவ வசதி, கல்வி வசதி, மாசு குறைவு, குறைந்த அளவு கிரைம் ரேட் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆய்விலும் சென்னைக்கு 150வது இடமும் கிடைத்திருந்தது.
''இந்தியாவிலேயே சென்னைதான் சிறந்த நகராமாகக் கருதுகிறோம். இது நான்கு முக்கிய தரவுகளை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. நகரத்தின் உள் கட்டமைப்பு, குறைந்த அளவு கிரைம் ரேட், சட்ட ஒழுங்கு, வெளிநாடுகளுடன் நட்புணர்வை பேணுவது, அதாவது சிஸ்டர் சிட்டிகளைத் தேடிக் கொள்வது என ஒவ்வொரு விஷயத்திலும் சென்னை இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு எடுத்துக் காட்டாக உள்ளது.
இந்தியாவின் மற்ற நகரங்களுடன் ஒப்பிடும் போது, சென்னைக்கு அவ்வளவாக தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இல்லை. மும்பை, டெல்லி, ஹைதரபாத்தில் நடப்பது போல சென்னையில் தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்தப்படுவதில்லை.முக்கியமாகப் பெண்களுக்கு எதிராகப் பொது இடங்களில் வட மாநில நகரங்களில் நடப்பது போன்ற கொடூரங்கள் அரங்கேறுவதில்லை.

மற்ற நகரங்களுடன் ஒப்பிடும் போது சென்னை போலீசார் லஞ்சம் கூட குறைவாகத்தான் வாங்குகிறார்கள். மக்கள் தனி மனித ஒழுக்கமும் சட்டத்தைப் பின்பற்றும் குணமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மெட்ரோ ரயில் வசதி முழுமையாக ஏற்படுத்தப்பட்டு விட்டால், சென்னையின் டிராபிக்கும் வெகுவாக குறைந்து விடும். சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. எல்லா வகையிலும் சென்னை தனது மக்களுக்குப் பாதுகாப்பான நகரமாக உள்ளது. ''
அப்போது சென்னையைப் பற்றி மெர்சர் நிறுவனம் வெளியிட்டிருந்த கருத்து இது,
கடந்த பிப்ரவரி மாதம்தான் மெர்சர் நிறுவனம் இந்த ஆய்வை வெளியிட்டிருந்தது. ஆனால் அடுத்த மூன்றே மாதங்களில் சென்னையில் முகம் மாறி விட்டது. ஒரே வாரத்தில் நடந்த தொடர்ச்சியான கொலைகள், உச்சக்கட்டமாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலை சென்னையைப் பாதுகாப்பற்ற நகராமா? என வடமாநில மீடியாக்களையே செய்தி வெளியீட வைத்து விட்டது.
தற்போதைக்கு சென்னையின் மக்கள் தொகை 98 லட்சம். கிட்டத்தட்ட ஒரு கோடியை நெருங்கி விட்டது. ஆனால் போலீசாரின் எண்ணிக்கையோ மிகவும் குறைவு. சென்னையில் தற்போதைக்கு ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 372 போலீசார் உள்ளதாக டெல்லியில் உள்ள போலீஸ் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் ஆய்வு மையத்தின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது. தமிழக அளவில் ஒரு லட்சம் மக்களுக்கு 127 போலீசார் இருக்கின்றனர்.
குற்றம் எப்போது நடக்கும் எப்படி நடக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு ஆயிரம் போலீசாவது இருக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற குற்றச்சம்பவங்கள் நடக்கும் வாய்ப்பு குறையும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.