அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவருடன் காரில் வந்த தந்தை விபத்தில் இறந்தார். ஆனாலும் தந்தையின் ஆசையை நிறைவேற்ற அந்த மாணவர் கலந்தாய்வில் கலந்துகொண்டு, சிவில் என்ஜினீயரிங் படிப்பை தேர்ந்து எடுத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் வத்தனா குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் சிவகங்கை சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்துவந்தார். அவருடைய மகன் பிரதியுனன்(வயது17), பிளஸ்-2 முடித்து பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து இருந்தார்.
அவர் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் தந்தையுடன் புதுக்கோட்டையில் இருந்து காரில் புறப்பட்டார். கார் உளுந்தூர்பேட்டை அருகே விபத்துக்குள்ளானதில் ஏட்டு ரவீந்திரன் இறந்துவிட்டார். ஆனாலும் தந்தையின் ஆசையை நிறைவேற்ற கலந்தாய்வில் கலந்துகொள்ள பிரதியுனன் நேற்று வந்தார். அவர் கூறியதாவது:-
புதுக்கோட்டையில் இருந்து 13-ந்தேதி இரவு 11-30 மணிக்கு காரில் புறப்பட்டோம். காரை எனது தாய்மாமா பாக்கியராஜ் ஓட்டினார். எனது தந்தை ரவீந்திரன் காரின் முன் இருக்கையில் இருந்தார். நானும் எனது சித்தப்பா அனீசும் பின் இருக்கையில் உட்கார்ந்து இருந்தோம்.
காரில் வந்தபோது எனது தந்தை, நன்றாக படித்து என்ஜினீயர் ஆகவேண்டும் என்று என்னிடம் கூறிக்கொண்டு வந்தார். சிறிது நேரத்தில் அவர் தூங்கிவிட்டார். நான் செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டு வந்தேன். கார் நள்ளிரவில் உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் கூட்டு ரோட்டில் சென்றபோது ஒரு லாரி எங்கள் காரின் மீது பலமாக மோதியது.
இதில் நிலைகுலைந்த நாங்கள் கூச்சல் போட்டோம். காரின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது. எனது தந்தை ரவீந்திரன் எந்த அசைவும் இன்றி இருந்தார். நான் பலமுறை கூப்பிட்டும் அவர் பதில் பேசவில்லை. பிறகுதான் அவர் இறந்துவிட்டது தெரிந்தது. காரில் என்னுடன் வந்தவர் இறந்துவிட்டாரே என்று அழுகை வந்தது.
எனக்கும், மாமாவுக்கும், சித்தப்பாவுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. நாங்கள் அனைவரும் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை பெற்றோம்.
ஊரில் உள்ள எனது தாயார் ரேணுகாவுக்கு தந்தை இறந்தது பற்றி தகவல் தெரிவித்தோம். அவர் துக்கம் தாங்கமுடியாமல் கதறி அழுதபடி உடனடியாக புறப்பட்டு உளுந்தூர்பேட்டை வந்தார். அவர் பஞ்சாயத்து துணைத்தலைவராக இருக்கிறார். எனது தாயார் என்னிடம், உன் தந்தையின் ஆசையை நிறைவேற்ற கலந்தாய்வுக்கு செல்லும்படி கூறினார்.
என்னை ஒரு என்ஜினீயர் ஆக்க வேண்டும் என்ற எனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற நான் கலந்தாய்வில் கலந்துகொள்ள அரசு பஸ்சில் ஏறி சென்னையை அடுத்த பெருங்களத்தூருக்கு வந்தேன்.
எனது தந்தை வேலைபார்த்த சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் உயர் அதிகாரிகளுக்கு கொடுத்த தகவலின்பேரில் காஞ்சீபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஷீ பெருங்களத்தூரில் இருந்து என்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வுக்கு அழைத்துவந்தார்.
கலந்தாய்வில் நான் தனியார் பொறியியல் கல்லூரியில் சிவில் பிரிவை தேர்ந்து எடுத்துள்ளேன். இனி நன்றாக படித்து எனது தந்தையின் ஆசையை நிறைவேற்றுவேன்.
இவ்வாறு பிரதியுனன் தெரிவித்தார்.
பின்னர் அவர் தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டு சென்றார். பிரதியுனனுக்கு சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமாறன், பிரதியுனனின் உறவினர்கள் அன்பு அமுது, வக்கீல் தமிழ் அமுது, அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் ஆகியோர் கலந்தாய்வின்போது மனிதாபிமானத்துடன் உறுதுணையாக இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.