ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக அதிகமானோர் வாக்களித்ததையடுத்து, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகியுள்ளார். அத்துடன் லண்டன் டவ்னிங் தெருவில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தையும் நேற்றே காலி செய்தார். டவ்னிங் தெரு இல்லத்தில், கடைசி இரவு உணவாக டேவிட் கேமரூன் குடும்பத்தினர் இந்திய உணவு வகைகளை உண்டுள்ளனர்.
லண்டனில் உள்ள 'கென்னிங்டன் தந்தூரி' என்ற இந்திய உணவகம், இங்கிலாந்து முழுவதும் மிகவும் பிரபலம். பெரும்பாலான இங்கிலாந்து அரசியல்வாதிகள், இந்த உணவு விடுதியின் வாடிக்கையாளர்கள். கடந்த 1985 ம் ஆண்டில் இருந்து, இங்கிலாந்து பிரதமர்களுக்கு இந்த உணவகத்தில் இருந்து உணவு வரவழைப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். தற்போது பதவி விலகியுள்ள டேவிட் கேமரூனும் அதற்கு விதி விலக்கல்ல. டேவிட் கேமரூன் இந்திய உணவு வகைகளுக்கு பரம ரசிகரும் கூட. இந்திய உணவு வகைகளை ஒரு கை பார்த்து விட்டு பிரெட்டி அண்ட் ஹாட் என்று சொல்வது கேமரூனின் வழக்கம்.
இந்நிலையில்தான், இங்கிலாந்து பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில், புதன்கிழமை இரவு உணவாக இந்திய உணவு வகைகளை சாப்பிட டேவிட் கேமரூன் குடும்பத்தினர் விரும்பியுள்ளனர். இதையடுத்து கென்னிங்டன் உணவகத்துக்கு ஆர்டர் அளித்துள்ளனர். டேவிட் கேமரூன் மனைவி சமாந்தா ஷெர்ஃபீல்டு, மகள்கள் நான்சி, ஃபுளோரன்ஸ், மகன் ஆர்தூர் எல்வன் ஆகியோர் டைனிங் டேபிளில் குழுமியிருக்க, வரவழைக்கப்பட்ட இந்திய உணவு வகைகள் பரிமாறப்பட்டன. ஹைதரபாத் சப்ரான் சிக்கன், காஷ்மீரி ரோகன் ஜாஸ், கேடி மிக்ஸ்டு கிரில் (ஒருவகையான மட்டனும் சிக்கனும் கலந்து செய்யப்பட்ட கிரில் ) சிக்கன் சல்பிராசி, சாக் ஆலு, சாக் பன்னீர், பாலக் ,கோஸ்ட், வெஜ் சமோஸ் மற்றும் அரிசி உணவுகளை கேமரூன் குடும்பத்தினர் ருசித்து ரசித்து சாப்பிட்டுள்ளனர்.
ஒரு ஸ்டாக் புரோக்கரின் மகனாக பிறந்து, இங்கிலாந்து பிரதமராகிய 49 வயது டேவிட் கேமரூனுக்கு ஆக்ஸ்போர்டில் சொந்த வீடு உள்ளது. ஆனால் குழந்தைகள் மூவரும் லண்டனில் படித்து வருவதால், தொடர்ந்து அங்கேயே வசிக்க கேமரூன் தம்பதியர் முடிவு செய்துள்ளனர். இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ஜான் மேஜரின் உதவியாளராக சேர்ந்த கேமரூன், பின்னர் படிப்படியாக உயர்ந்து கன்சர்வேடிவ் கட்சியின் முக்கிய பொறுப்புக்கு வந்தவர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.