Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 9, 2016

ப்ரோக்கோலி சூப் செய்வது எப்படி


தேவையான பொருட்கள் :

ப்ரோக்கோலி - 1 கப்
வெங்காயம் - 2
பூண்டு - 10 பற்கள்
ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சோள மாவு - அரை ஸ்பூன்

செய்முறை :

* வெங்காயம், ப்ரோக்கோலியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சோள மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதக்கிய பின் ப்ரோக்கோலி போட்டு வதக்கவும்.

* பிறகு தண்ணீர் விட்டு  5 நிமிடம் வேக விடவும். பின்னர் இதை ஆற வைத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

* அரைத்த விழுதை சிறிது தண்ணீர் விட்டு, தேவையான அளவு உப்பு, மிளகுத் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். நன்றாக கொதிக்கும் போது கரைத்து வைத்துள்ள சோளமாவை ஊற்றி 5 நிமிடம் கழித்து இறக்கி சூடாக பரிமாறவும்.

* சுவையான ப்ரோக்கோலி சூப் ரெடி.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.