Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 10, 2016

பாதியில் நின்ற திருமணம்! மோடி குறித்து மணமக்கள் விவாதம் செய்ததால் விபரீதம்


கான்பூரில் மணமக்கள், பிரதமர் மோடி குறித்து விவாதம் செய்து சண்டை போட்டுக்கொண்டனர். இதனால் திருமணம் பாதியிலேயே நின்று போனது.

 உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் சொந்த பிசினஸ் செய்யும் ஒருவருக்கும் அரசு ஊழியரான மணப் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. கடந்த 7ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.திருமணத்துக்கான ஏற்பாடுகளை இரு தரப்பும் தீவிரமாக செய்து வந்தது. கோயிலில் வைத்து திருமணம் செய்ய இரு வீட்டாரும் திட்டமிட்டிருந்தனர்.

எல்லாமே நன்றாக போய்க் கொண்டிருந்த சமயத்தில், மாப்பிள்ளையும் பொண்ணும் மோடி குறித்து விவாதம் செய்தனர் மணமக்கள். ஒருகட்டத்தில் விவாதம் வாய்ச் சண்டையாக மாறி, கருத்துவேறுபாடு வந்துள்ளது. இதனால் கோபமான இருவரும் திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.   சமாதான முயற்சி தோல்வியில் முடிந்ததால், திருமணம் நின்றது. எனினும் இருவரும் சமாதானமாகி மீண்டும் திருமணத்திற்கு சம்மதிப்பார்கள் என உறவினர்கள் காத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.