Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 18, 2016

உயிரோடு விளையாடும் சிறுவர்களின் சாகச வீடியோ


உத்திரபிரதேசத்தில் 7 சிறுவர்கள், ஒரு மேம்பாலத்தில் ரயில் வந்து கொண்டிருக்கும் போது, அங்கிருந்து கீழே உள்ள ஆற்றில் குதிக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபத்தில் உள்ள ஒரு ஆற்றில் உள்ள மேம்பாலத்தில் வழக்கமாக குறிப்பிட்ட நேரங்களில் ரயில்கள் செல்லும். அங்கு வீர சாகசம் செய்ய நினைத்த 7 சிறுவர்கள், அந்த பாலத்தில் மேல் நின்று கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு ஒரு ரயில் வருகிறது. அந்த ரயில் அருகில் வரும் போது, அவர்கள் ஒவ்வொருவராக கீழே உள்ள ஆற்றில் குதிக்கிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில், அந்த ரயில் அவர்களை கடந்து செல்கிறது. அதை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

இந்த வீடியோ தொலைக்காட்சிகளில் இன்று ஒளிபரப்பப்பட்டது. இதைக் கண்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சமூக வலைத்தளங்களிலும், இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.