Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 19, 2016

பசுவின் இறைச்சி என்று சிறை - ஆனால், அது பசுவின் இறைச்சியல்ல என்று முடிவு!



மும்பை, ஜூலை 18 மும்பையில் தாராவி பகுதியில் மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர்  கடந்த ஏப்ரல் மாதத் தில் சட்ட விரோதமாக பசு மாட்டின் இறைச்சியை ஏற்றுமதி செய்வதாக ஓர் இறைச்சிக்கூடத்தை சோதனையிட்டனர். இறைச்சிக்கூடக் கிடங்கிலிருந்து6.5டன் இறைச்சியைக் கைப்பற்றி னார்கள்.

இறைச்சிக்கூடத்தின் உரிமையாளரின் மகனான ஷாம்ஷத் குரேஷி (28) என்பவரைக் கைது செய்தனர். மேலும், இறைச்சிக்கூடத்தின் ஊழியர்களான அஷ்ரப் அலி, சர்தாஜ் குரேஷி ஆகி யோர்மீதும் மகாராட்டிர மாநில விலங்குகள் பாது காப்பு சட்டம் 1976 மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு (விலங்குகளை வதைப் பது அல்லது கொல்வது) 429இன்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

குரேஷி பசுவின் இறைச் சியை வியட்நாம் நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதாகக்குற் றம் சுமத்தினார்கள்.அந்நாட் டில் நாய்க்கு உணவாக்கப்படு வதாகவும், மேலும் பிலிப் பைன்ஸ் நாட்டுக்கும் ஏற்றுமதி செய்வதாகவும், அந்நாட்டில் சூப் ஆக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள்.

கைப்பற்றப்பட்ட இறைச்சி பசு மாட்டின் இறைச்சி அல்ல என்றும், எருமை மாட்டின் இறைச்சியே என்று ஆய்வக அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

ஆய்வக அறிக்கையில் கைப்பற்றப்பட்ட இறைச்சி பசுவின் இறைச்சி அல்ல, எருமையின் இறைச்சியே என்று வெளியான தகவலை யடுத்து. ஆய்வக அறிக்கையை பாந்த்ரா நீதிமன்றத்தில் காவல்துறையினர் அளித்து, குற்றம்சுமத்தப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியுள்ளனர்.

குற்றம் சுமத்தப்பட்டவர் களுக்கு எதிராக குற்றத்துக்கான ஆதாரங்களை எங்களால் அளிக்க முடியவில்லை, ஆகவே, அவர்களை விடு விக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் காவல்துறையினர் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

கால்நடைத்துறை அலுவ லர் மருத்துவர் சஞ்சீவ் பிஞ்ஜார்கர், மும்பை மாநகராட்சி (சந்தை) ஆய்வாளர் தஷ்ரத் சவான் மற்றும் ஆனந்த் ஷிண்டேஆகியோர்குற்றப் பிரிவு காவல்துறை ஆய் வாளர் சுனில் மானே மற்றும் காவல்துறையினரால் சோதனை நடத்தப்பட்டபோது உடனிருந்தனர். கைப்பற்றப் பட்ட இறைச்சியைஎடுத்த எடுப்பிலேயே, பார்க்கும் போது பசுவின் இறைச்சிபோல் தோன்றியதால், பசுவின் இறைச்சி என்று கூறிவிட்ட னராம்.

குற்றம் சுமத்தப்பட்ட வர்கள் சார்பில் வழக்கில் வாதாடிய வழக்குரைஞர் இம்ரான் ஃபரூக்கிகூறும் போது,

“குரேஷி உள்ளிட்டவர் களை கைது செய்தது சட்ட விரோதமாகும். காவல்துறையினர் கைது செய்த நேரத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை தொடர்பான மனு மும்பை உயர்நீதிமன்றத்தில் நிலுவை யில் இருந்தது. தடைகுறித்த முடிவு எடுக்கப்படும்வரை கைது செய்வதற்கும் தடை உள்ளது. ஆனால், குரேஷி உள்ளிட்டவர்கள் எவ்வித முகாந்திரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டனர்’’ என்றார்.

ஆய்வக அறிக்கையில் பசுவின் இறைச்சி அல்ல என்பதால் வழக்கை திரும்பப் பெற்ற காவல்துறையினர்  கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்களையும் வழக்கிலிருந்து விடுவிக்கு மாறு நீதிமன்றத்தில் மனு வைத் தாக்கல் செய்தனர்.

ஏப்ரல் மாதம் வழக்கு பதிவுசெய்யப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள்மீதான வழக்கு தற்போது கைவிடப் பட்டு, அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதெல்லாம் சரிதான்; சிறையில் இருந்தார்களே, அதற்கு யார் பொறுப்பாம்?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.