Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 16, 2016

கண் கலங்கினேன்...............!!.....



இன்று காலை  கடைத் தெருவிற்கு சென்றேன்...... அங்கு கடைக்கு எதிரில் ஒரு குப்பைத் தொட்டியில் ஒரு நாய் ஒன்று உணவு தேடிக்கிட்டு இருந்தது....
 அங்கு பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அதைப் பார்த்ததும் கல்லை எடுத்து எடுத்து எறிந்தனர்.... அந்தக் கல் அந்த நாயின் காலில் பலமாக அடிபட்டது.... காலில் இரத்தம் சொட்ட ஓட முயன்ற அந்த நாய் வலியிலும் குப்பையில் கிடந்த எதோ ஒரு உணவு பொட்டலத்தை வாயில் கவ்விக் கொண்டு நொண்டிகொண்டே ஓடியது.......

   அந்த சிறுவர்களிடம் "இப்படியெல்லாம் செய்யாதீர்கள் அது பாவம் அல்லவா " என்று கூறிவிட்டு  ஒரு பிஸ்கட் பாக்கெட்டை வாங்கிக் கொண்டு,  நாய் சென்ற வழியில் சென்றேன் ....சிறிது தூரம் சென்றதும் அந்த நாய் ஒரு புதரின் அருகில் நிற்பதைப்  பார்த்தேன்...... அதைப்  பார்த்ததும் என் மனம் கலங்கியது..... அங்கு ஐந்து நாய்க் குட்டிகள் இருந்தன....... அந்த நாயின் குட்டிகள் என நினைக்கிறேன்....... அது கவ்விக்கொண்டு வந்த உணவு பொட்டலத்தை குட்டிகள் சாப்பிட்டு கொண்டிருந்தன.... அந்த நாயின் தாய்மைப் பாசத்தை நினைத்துக்  கண்கள் கலங்கியது.........

 நான் கொண்டு வந்த பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்து அந்த நாயின் அருகில் சென்றேன்.... வலியில் அந்த நாயின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை பார்த்ததும் என் மனம் வருந்தியது.... அதோட கண்ணை பாருங்க உங்களுக்குப்  புரியும் அதோட வலி....
 அதுவும் ஒரு உயிர் ஜீவன் தானே......

 அதற்கு நம்மால் உதவ முடியலைனாலும் பரவாயில்லை இந்த மாதிரி செய்யாதீர்கள்.... இது ஏதோ சிறுவர்கள் செய்த தவறு தான் ....ஆனாலும் சில அறிவாளிகளும் இப்படி செய்கின்றனர்.... அது தவறு என்பதை இனிமேலாவது உணருங்கள்..... 
உங்களால் முடிந்தால் உங்கள் தெருவில் உள்ள நாய்க்கு ஒரு பாக்கெட் பிஸ்கட் இல்ல பழைய சோற்றை போடுங்க.... அது உங்க வீட்டை பாதுகாத்து நன்றியுடன் இருக்கும்....!!...

நன்றி............"'

பொன்மணி_ராசரத்தினம் அவர்களின் பதிவிலிருந்து! 



No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.