Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 30, 2016

வெள்ளவத்தையில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார விடுதி முற்றுகை



கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

'ஆயுர்வேத மசாஜ் நிலையம்' என்ற பெயரில் இந்த விபச்சாரவிடுதி இயங்கி வந்த நிலையில், நீதிமன்ற அனுமதிக்கு அமைய பொலிஸார் முற்றுகை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படும் 4 பெண்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் வவுனியா, முகத்துவாரம், பாதுக்க மற்றும் புளத்சிங்கள ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் 20, 21 மற்றும் 38 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, குறித்த விபச்சார விடுதியினை நடாத்தி வந்த முகாமையாளர் எனக் கூறப்படும் ஹங்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.



இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்று கல்கிசை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.