Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 28, 2016

உடன்பிறந்த சகோதரியை துஷ்பிரயோகம் செய்த இரு சகோதரர்கள் கைது..!!



உடன்பிறந்த சகோதரியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரண்டு சகோதரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் குறித்த சகோதரியினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமையவே சகோதரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே தாய்வயிற்றில் பிறந்த சகோதரியை இரண்டு சகோதரர்களும், கடந்த 2013 மற்றும் 2014 வருடங்களில் பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் நேற்று காலி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வைத்திய பரிசோதனையின் பின் குறித்த சகோதரியினை சிறுவர் சீர்திருத்த நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.பெற்றோர் கூலித் தொழிற்கு சென்ற பின் குறித்த சகோதரியை இரண்டு சகோதரர்களும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.