July 6, 2016
கணவனால் நாள்பட்ட மன அழுத்தத்திற்கு ஆளாகும் பெண்கள்- அவர்களின் தண்டனைகள் பற்றிய ஒரு அலசல் !!
கணவன் தன் மனைவி மீது தொடர்ந்து வன்முறை தாக்குதல்கள் நடத்திக் கொண்டே இருக்கின்ற போது, அது மன ரீதியாகவும் இருக்கலாம் அல்லது உடல் ரீதியாகவும் இருக்கலாம்; இந்தத் தொடர் தாக்குதலால் அந்தப் பெண் ஒரு விதமான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றார் என்கின்றது ஆய்வுகள். இதனை ஆங்கிலத்தில் Battered Woman Syndrome என்று அழைக்கின்றார்கள். இதைப் பற்றி முதலில் 1970 -இல் டாக்டர். லெனோரே வால்கெர் (Dr. Lenore Walker) என்ற உளவியல் நிபுணர் தான் கோட்பாடாக, இந்த சமூகத்தில் ஒரு பெண் மன மற்றும் சமூக ரீதியாக தொடர்ச்சியாக வன்முறைக்கு ஆளாகும் போது எப்படி பாதிப்புக்கு உள்ளாகிறார் என்று “The Battered Woman” என்ற நூலில் கூறினார்.
தொடர்ந்து தாக்குதலுக்கு தன் கணவனால் உள்ளாகும் பெண் ஒரு வன்முறை சுழற்சிக்கு ஆளாகி மன ரீதியாக பாதிப்படைகின்றாள். அப்படி பாதிக்கப்படும் பெண் அந்தக் குடும்ப வன்முறையில் இருந்து தப்பிக்க தன் கணவனை கொலை செய்கின்றாள். Dr . Walker தெளிவாகக் கூறுகின்றார் இது ஒரு நோய் அல்ல தொடர்ந்து கணவனால் துன்பப்படுத்தப்படும் பெண் பல்வேறு சமூகக் காரணங்களால் அந்த உறவில் இருந்து வெளியேற முடியாமல் கணவனைக் கொன்றுவிடுகின்றாள்.
இங்கு தான் சிக்கல் ஆரம்பமாகின்றது. இது கொலையா? அல்லது தன் எஞ்சியிருக்கும் வாழ்வை காப்பாற்றிக் கொள்ள அந்தப் பெண் எடுக்கும் தற்காப்பு நிலையா? என்று சட்ட ரீதியாக சிந்தித்தால், இந்திய தண்டனைச் சட்டம் 76 முதல் 106 வரை தனியார் பாதுகாப்பு உரிமைகளின் பொது விதிவிலக்குகள் பற்றி கூறுகின்றது. அதில் குறிப்பாக தற்காப்பு கருதி ஒரு நபர் செய்யும் கொலையை மரணம் விளைவிக்கும் குற்றமாகவே சட்டம் பார்க்கின்றது, கொலையாக அல்ல. அதனை இந்திய தண்டனைச் சட்டங்கள் 96, 97, 102, 105 & 106 தெளிவாக விளக்குகின்றது .
குறிப்பாக இந்திய தண்டனைச் சட்டம் 100 தற்காப்புக்காக விளைவிக்கப்படும் மரணம் எப்போதெல்லாம் கொலையாக கருதப்பட மாட்டாது என்று விளக்குகின்றது.
திடீர் தாக்குதல் தன் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்று கருதும் போது தாக்குதல்,
தனக்கு மிகக் கொடிய காயங்களை ஏற்படுத்தும் என்று கருதும் போது தாக்குதல்,
பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய நடத்தப்படும் போது தாக்குதல்,
இயற்கைக்கு மாறான இச்சைக்காக நடத்தப்படும் போது தாக்குதல்,
கடத்தலுக்காக நடத்தப்படும் போது தாக்குதல்,
ஒரு நபரை அடைத்து வைக்க நடத்தப்படும் நிலையில்; அவர் அதிகாரிகளின் உதவியை நாட முடியாது என்று நினைக்கும் நிலையில்,
தற்காப்பு கருதித்தான் மரணம் நிகழ்த்தப்பட்டது என்பதை நீதிமன்றம் தறுவாய் இடச்சூழல்(circumstances) கண்டே முடிவு செய்யும். இது ஒவ்வொரு வழக்கிலும் மாறுபடும். இந்த நிலையில் ஒரு பெண் கணவனின் தொடர் தாக்குதல் காரணமாக மனம் நொந்து செய்யும் கொலை தற்காப்பு
கணவனால் நாள்பட்ட மன அழுத்தத்திற்கு ஆளாகும் பெண்கள்- அவர்களின் தண்டனைகள் பற்றிய ஒரு அலசல் !!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 06, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 06, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.