July 27, 2016
விவசாயிகள் தற்கொலைக்கு பேய்கள் தான் காரணமாம் – மத்திய பிரதேச பாஜக அரசு
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கு பேய்கள் தான் காரணம் என்ற பாஜக அமைச்சரின் பேச்சால் கடும் சர்ச்சை எழுந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். முதல் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் தொகுதியிலேயே கடந்த மூன்று ஆண்டுகளில் 418 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து மத்திய பிரதேச சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்ற போது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கு நிதிப்பிரச்சனை மட்டும் காரணம் இல்லை. பேய்கள் தான் காரணம் என்று உள்துறை அமைச்சர் பூபேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் சிரிக்கும் நிலை ஏற்பட்டது. அத்தோடு மட்டும் இல்லாமல் விவசாயிகளின் குடும்பத்தினரே தந்த தரவு இது என்று தெரிவித்துள்ளார். இதற்கு மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது,
இதைத்தொடர்ந்து சட்ட மன்றத்திற்கு வெளியே காங்கிரஸ் உறுப்பினர் படேல் செய்தியாளர்களிடம் பேசுகையில், விவசாயிகள் தற்கொலைக்கு பேய்கள் தான் காரணம் என்று அரசு சிரிப்பூட்டும் பதிலை தருகிறது, மாவட்டத்தில் 418 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டு உள்ளனர், இதில் 117 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. நிதிபிரச்சனை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டனர் என்பதை பதிவுசெய்ய அரசு தவறிவிட்டது. விவசாயிகள் பயிர் சேதம் காரணமாகவே தற்கொலை செய்துக்கொண்டனர் என்பது எனக்கு கிடைத்த தகவலாகும், என்று கூறினார்.
விவசாயிகள் தற்கொலைக்கு பேய்கள் தான் காரணமாம் – மத்திய பிரதேச பாஜக அரசு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 27, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 27, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.