July 26, 2016
மலைவாழ் பெண்களுக்கு வனத்துறை அதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மலைவாழ் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள கடமலைக்குண்டு வனப்பகுதியில், 50க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். மலைப்பகுதியில் தேன் எடுத்தல், கிழங்கு சேகரித்தல் மற்றும் அரிய வகை மூலிகைகளை சேகரிக்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், 4 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கம்பம் சுருளிப்பட்டி அருகேயுள்ள மலைப்பகுதியில் தேன் மற்றும் கிழங்குகள் சேகரிக்கச் சென்றுள்ளனர். மலையிலிருந்து பெண்கள் திரும்பி வந்தபோது, அவர்களை கம்பம் வனத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
அப்போது அவர்களின் ஆடைகளை களைந்து சோதனையிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தட்டிக்கேட்ட பெண்களின் கணவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.
மலைவாழ் பெண்களுக்கு வனத்துறை அதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 26, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.