July 26, 2016
விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்!
முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதாவிற்கு திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு பல்லடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து தமிழக அரசின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்றைய விசாரணையின் போதும் 4வது முறையாக நேரில் ஆஜர் ஆகாததால் தேமுதிக தலைவர் விஜய்காந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோருக்கு நீதிபதி அலமேலு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 26, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.