Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 31, 2016

சுவாதியை கொன்ற குற்றவாளியை விரைவில் அறிவிப்பேன்!” – ராம்குமார் வழக்கறிஞர் ராமராஜ்


“சுவாதியை கொலை செய்தது யார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது. விரைவில் கொலையாளியை அறிவிப்பேன்”’ என்று ராம்குமார் வழக்கறிஞர் ராமராஜ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், மென் பொறியாளர் சுவாதி, கடந்த மாதம் 24ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபரை, காவல்துறையினர் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து  காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதனிடையே, ராம்குமாரை அழைத்து வந்து ரத்த மாதிரி பரிசோதனையை, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் நடத்தினர். இதைத் தொடர்ந்து ராம்குமார் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், புழல் சிறையில் ராம்குமாரை அவரது வழக்கறிஞர் ராமராஜ் இன்று சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ராமராஜ்,, “சுவாதியை கொலை செய்தது யார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது. விரைவில் கொலையாளியை அறிவிப்பேன். ராம்குமாரிடம் காவல்துறையினர் இன்று ரத்த மாதிரி சேகரித்தது சட்டத்திற்கு புறம்பானது. ராம்குமாரை குற்றவாளியாக்க ஒரே கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்துகிறார்கள். சுவாதி குறித்து காவல்துறையினர் முழுமையாக விசாரிக்கவில்லை. இந்த கொலை வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டு, வரும் 3ஆம் தேதியன்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளேன்” என்று கூறினார்.

www. heronewsonline.com

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.