July 28, 2016
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு, வங்கிகளை தனியார் மயமாக்கல் போன்ற கொள்கைகள் எதிர்ப்பு, வாராக்கடனாக நிலுவையில் உள்ள ரூ.13 லட்சம் கோடியை வசூலிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 12 மற்றும் 13-ந்தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்து இருந்தது.
இதற்கு டெல்லி ஐகோர்ட்டு தற்காலிக தடை விதித்ததால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்தது. இதற்கிடையே, 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இந்தியா முழுவதும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கிகள் சம்மேளனம் ஏற்கனவே அறிவித்தது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கி ஊழியர் சங்க பிரநிதிகளுடன் மத்திய தொழிலாளர் நல ஆணையர் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று வங்கி ஊழியர் கூட்டமைப்பு அறிவித்தது.
அதன்படி நாளை ஒருநாள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதில் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்றும் ஐக்கிய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவின் அமைப்பாளர் டி.தாமஸ் பிரான்கோ அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளார்.வேலைநிறுத்தத்தையொட்டி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாகவும் அதில் அவர் கூறி இருக்கிறார். தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக, பாராளுமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
Thanks To: Daily Thanthi
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்
Reviewed by மறத்தமிழன்
on
July 28, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
July 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.