மும்பை பா.ஜ.க தலைவர் சிவசேனாவை பிசாசு என்று கூறியதற்காக அவரது உருவ பொம்மையை சிவசேனா கட்சியினர் எரித்துள்ளனர். மகாராஷ்டிரா காபினட் விரிவடைவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த நிகழ்வு நடந்துள்ளது.
கட்சி சந்திப்பு ஒன்றில் பேசிய மும்பை பா.ஜ.க தலைவர் ஆஷிஷ் சேலார் சிவா சேனாவை குறிப்பிட்டு கூறாமல், சிறிய பிசாசு அதிக சப்தம் எழுப்புகிறது என்று மகாபாரத கதையை கூறியுள்ளார். மேலும் அந்த பிசாசு குடுவையில் அடைக்கப்படும் என்று வர இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலை குறிப்பிட்டு கூறியுள்ளார். இது சிவசேனா கட்சியினரிடையே கடும் எதிர்பலைகளை கிளப்பியுள்ளது. மேலும் இது பா.ஜ.க மற்றும் சிவசேனா இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஷிஷ் சேலார், தான் கூறியதை பத்திரிகையாளர்கள் திரித்து எழுதியுள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும் பா.ஜ.க தொண்டர்களிடையே ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கருவி பயன்படுத்த வேண்டும் என்பதை குறிப்பிடவே அந்த கதையை கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
விரிவுபடுத்தப்பட உள்ள மகாராஷ்டிரா காபினெட்டில் சிவசேனாவிற்கு ஏதேனும் இடங்கள் கொடுக்கப்பட இருகின்றனவா என்று இதுவரை எந்த செய்திகளும் இல்லை.
விரிவுபடுத்தப்பட உள்ள மகாராஷ்டிரா காபினெட்டில் சிவசேனாவிற்கு ஏதேனும் இடங்கள் கொடுக்கப்பட இருகின்றனவா என்று இதுவரை எந்த செய்திகளும் இல்லை.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.