July 26, 2016
சுவாதியின் “பெயரை” காப்பாற்றும் போலீசார்: பிலால் சொன்ன தகவல்களை பதிவு செய்ய மறுப்பு!
சுவாதி கொலை குறித்து களஆய்வு மேற்கொண்டுள்ள ‘எவிடன்ஸ்’ அமைப்பைச் சேர்ந்த கதிர், சுவாதியின் காதலர் என கூறப்படும் பிலாலிடம் பெறப்பட்ட தகவல்களை போலீசார் பதிவு செய்யாமல், இதை வெளியே சொல்ல வேண்டாம் என்று பிலாலுக்கு அறிவுறுத்தியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பான ‘எவிடன்ஸ்’ கதிர் பதிவு:-
குற்றச் சம்பவங்கள் குறித்து விசாரணை செய்யும் அதிகாரிகள் அனைத்து தகவல்களையும் வாக்குமூலங்களையும் முழுமையாக பதிவு செய்ய வேண்டும். ஆனால் சுவாதி படுகொலை வழக்கில் பிலாலிடம் பெறப்பட்ட தகவல்களை போலீசார் வெளியிட மறுக்கின்றனர் என்பது உண்மை. அது மட்டுமல்லாமல், பெறப்பட்ட தகவல்களை பதிவு செய்யாமல் இதை வெளியே சொல்ல வேண்டாமென்றும் பிலாலுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது.
இறந்துபோன சுவாதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படக் கூடாது என்கிற கருத்தில் மாறுபாடு எதுவும் இல்லை. ஆனால் ஒரு முழுமையான உண்மையை எப்படி மறைக்க முடியும்?
பிலாலிடம் பெறப்பட்ட தகவல்களை முழுமையாக பதிவு செய்யாமல் ராம்குமாரை குற்றப்படுத்துகிற தகவலை மட்டும் பதிவு செய்வதும், ராம்குமாரிடம் பெறப்பட்ட தகவல்களோடு கூடுதலாக இணைத்து பதிவு செய்வதும் சட்டத்திற்கு புறம்பானது என்பேன். இதுபோன்ற வாக்குமூலங்கள் பொய்யானவை.
கடந்த 5 வருடமாக புலன் விசாரணை நிலுவை பெருமளவு காவல்துறையிடமே இருக்கிறது. நீதிமன்ற விசாரணைக்கு பெரும்பாலான வழக்குகள் எடுத்து செல்லப்படுவது இல்லை. அதற்கு முக்கிய காரணம் விசாரணை போக்கில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக அலைபேசி அலைவரிசை, சிசிடிவி கேமரா போன்ற டிஜிட்டல் ஆதாரங்களை மட்டுமே போலீசார் அதிகமாக நம்புகின்றனர். களஆய்வு, சாட்சிகளை பலப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் சமீபகாலம் காவல்துறையிடம் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.
டிஜிட்டல் ஆதாரங்கள் எல்லா வழக்கிலும் நீதியை பெற்றுக் கொடுத்து விடாது. முக்கியமான சில வழக்குகளில் மட்டும்தான் டிஜிட்டல் ஆதாரங்கள் நீதியை பெற்றுக் கொடுக்கும். அதுமட்டுமல்லாமல், இது போன்ற கருவி சார்ந்த ஆதாரங்களை குற்றத்தரப்பினர் எப்படி வேண்டுமென்றாலும் மறுக்கலாம்.
சுவாதியை படுகொலை செய்த குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்பதில் இங்கு எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ராம்குமார் குற்றவாளி என்றால் கண்டிப்பாக தண்டிக்கப்படலாம். ஆனால், இந்த விசாரணையில் அரசியல் மற்றும் மத சக்திகள் குறுக்கீடு இருப்பது உண்மை. ஆகவே கொலைக்கான காரணங்கள் கண்டிப்பாக கண்டறியப்பட வேண்டும். விசாரணையும் நேர்மையாக நடைபெற வேண்டும்.
‘எவிடன்ஸ்’ கதிர்
சமூக செயல்பாட்டாளர்
http://heronewsonline.com/swathi-murder-case-evidence-kathir/
சுவாதியின் “பெயரை” காப்பாற்றும் போலீசார்: பிலால் சொன்ன தகவல்களை பதிவு செய்ய மறுப்பு!
Reviewed by மறத்தமிழன்
on
July 26, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
July 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.