Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 24, 2016

உலக சைக்கிளிங் தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்து சாதனை!


உலக சைக்கிளிங் தரவரிசையில் இந்திய ஜூனியர் அணி,  முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

உலக சைக்கிள் ரேசிங் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த தரவரிசையில் 11வது இடத்தில் இருந்த இந்திய ஜூனியர் அணி, இந்த தரவரிசையில் 1012.5 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. சைக்கிளிங்  தரவரிசையில் இந்தியக் குழு முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறை. போலந்து அணி 960 புள்ளிகளுடன் 2வது இடத்தையும், தென்கொரிய அணி 900 புள்ளிகளுடன் 3வது இடத்தையும் பிடித்தது.

இது குறித்து இந்திய சைக்கிள் பந்தய சங்க பொதுச் செயலாளர் ஓன்கார் சிங் கூறுகையில்,'' கடந்த 2013 ம் ஆண்டுதான் சைக்கிள் ஃபெடரேசன் முறையாக செயல்படத் தொடங்கியது. அப்போது ஜூனியர் அணி 149 வது இடத்தில் இருந்தது. இப்போது முதலிடத்தை அடைந்திருக்கிறார்கள். கடுமையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது. பிற  விளையாட்டுகளைப் போல  சைக்கிளிங் வீரர்கள் ஒரே பயிற்சியாளரிடம் பயிற்சி பெறுவதில்லை. அணியில் 15 வீரர்கள் இருக்கின்றனர். ஒவ்வொருவரும் தனித்தனி பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெறுகின்றனர். ஜப்பானில் நடைபெறும் கெரின் சைக்கிள் போட்டியில், இந்தியக்குழுவை சேர்ந்த சானுராஜ்  10வது இடத்தை பிடித்திருந்தார்.

ஆடவர் போலவே மகளிர் அணியிலும் நல்ல முன்னேற்றம் உள்ளது. உலகத் தரவரிசையில் இந்திய மகளிர் ஜூனியர் அணி 8வது இடத்தை அடைந்திருக்கிறது. வீராங்கனைகள் தரவரிசையில் முதல் 20 இடத்திற்குள் அனு சோத்தியா உள்ளார். அந்தமானைச் சேர்ந்த வீராங்கனை தெபரா ஹெரால்ட், உலகத் தரவரிசையில் 6வது இடத்தில் இருக்கிறார். ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிப் பெறவில்லையென்றாலும் அடுத்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை இலக்காக வைத்து செயல்பட்டு கொண்டிருக்கிறோம்'' என்றார்.

இந்திய ஜூனியர் சைக்கிள் அணி, சுவிட்சர்லாந்தில் யூசிஐ டிராக் சைக்கிள் போட்டியில்  அடுத்தததாக பங்கேற்கவுள்ளது. இதற்காக இந்திய விமானப்படை வீரர்கள், இந்தியக் குழுவினருக்கு சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.