July 21, 2016
சுவாதியை போல் மீண்டும் கழுத்தறுத்து பெண் படுகொலை: பாலத்தின் கீழ் சடலம் வீச்சு
சென்னை திருவள்ளூர் அடுத்த வெள்ளவேடு அருகே சொக்காநல்லூர் சத்திரத்தில் இருந்து காவல்சேரி கிராமத்துக்கு செல்லும் சாலை உள்ளது. இச்சாலையின் குறுக்கே நெமிலிச்சேரி - வண்டலூர் உயர்மட்ட சாலை செல்வதால், அங்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. உயர்மட்ட சாலையின் கீழ் சுரங்கப்பாதை அருகே நேற்று மாலை 6 மணியளவில் ரத்த வெள்ளத்தில் பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இப்பகுதி, திருவள்ளூர் மற்றும் சென்னை மாநகர காவல் எல்லையில் உள்ளது. தகவலறிந்து வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம், கத்தியால் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தது. இதைதொடர்ந்து, மாவட்ட எஸ்பி சாம்சன், டிஎஸ்பி விஜயகுமார் ஆகியோர் அங்கு சென்றனர். தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் ரூபி சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது.
சடலத்தை கைப்பற்றிய போலீசார், பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொடூரமாக பெண்ணின் கழுத்தை அறுத்து உயர்மட்ட சாலையில் இருந்து கீழே வீசியிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். சடலமாக கிடந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர், கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். இச்சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாயமானவர்கள் விவரம் சேகரிப்பு
திருவள்ளூர் மற்றும் சென்னை மாநகர காவல் நிலைய எல்லை பகுதியில் பெண் சடலம் மீட்கப்பட்டு உள்ளது. யாராவது எங்கேயாவது கொலை செய்துவிட்டு, இங்கு கொண்டுவந்து வீசி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில், மாயமான பெண்களின் விவரங்கள், புகைப்படங்களை வைத்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
3 தனிப்படைகள் அமைப்பு
இதுகுறித்து, எஸ்பி சாம்சன் கூறுகையில், கொடூரமாக கொலை செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்ட பெண் சென்னையை சேர்ந்தவராக இருக்கலாம். அந்த பெண் குறித்து இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், பாலு, அய்யனாரப்பன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, காணாமல் போனவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். கொலையானவரின் விவரங்கள் தெரிந்ததும், உடனடியாக குற்றவாளிகள் கைது செய்ப்படுவார்கள் என்றார்.
சுவாதியை போல் மீண்டும் கழுத்தறுத்து பெண் படுகொலை: பாலத்தின் கீழ் சடலம் வீச்சு
Reviewed by மறத்தமிழன்
on
July 21, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
July 21, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.