July 26, 2016
மனித இறைச்சியை ஆப்ரிக்காவிற்கு ஏற்றுமதி செய்த சீனா? பகீர் புகைப்படங்கள்!
சீனா என்றாலே பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைக்கும். தொழில்நுட்ப சாதனங்களில் இருந்து உணவு உற்பத்தி வரை உலகெங்கிலும் போலிகளின் அரசனாய் திகழ்கிறது சீனா.
சமீப காலமாக உணவுகளில் போலி தயாரிப்படி சீனா உணவு மற்றும் சுகாதார அமைச்சகம் மிகக் கறாராக கண்காணித்து வருகிறது.
ஆனால், சில வாரங்களுக்கு முன்பு, மாட்டிறைச்சி என்ற பெயரில் இறந்த மனித உடல் உறுப்புகளை ஆப்ரிக்காவிற்கு சீனா ஏற்றுமதி செய்தது என தென் ஆப்பிரிக்க பகுதியான சாம்பியா போஸ்ட்-ல் வெளியான புகைப்படங்கள் சமூக ஊடகங்கள் எங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
சீனாவில் இருந்து தயாரிக்கப்படும் இறைச்சி உலகெங்கிலும் இருக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதில், தென் ஆப்ரிக்கா நாடான சாம்பியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இறைச்சியில் மனித உடல் உறுப்புகள் கலப்படம் செய்துள்ளனர் என அந்நாட்டு சாம்பியா போஸ்ட் எனும் பத்திரிகையில் புகைப்படங்கள் வெளியாகின
உலக மக்கள் தொகையில் பெரும் பங்கு கொண்டுள்ள சீனா, இறந்தவர்களின் சடலங்களை என்ன செய்வதென்று தெரியாமல் ஆப்ரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறதா? என அந்நாட்டு பத்திரிக்கை கேள்வி எழுபியுள்ளது
இதற்கு பதிலளித்த சீன தூதர் யாங் யூமிங் கேன்களில் அடைத்து மாட்டிறைச்சியை தான் சீனா சாம்பியாவிற்கு ஏற்றுமதி செய்து வந்தது. இது வியப்பையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இதுக் குறித்து விசாரணை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
இதுக்குறித்து உரிய அமைச்சகத்துடன் விசாரணை நடத்த சாம்பியா அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. உலகநாடுகள் மத்தியிலும், சமூக ஊடக பயனாளிகள் மத்தியிலும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சீனா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இது போலியானவை. உண்மையான புகைப்படங்கள் அல்ல. நாங்கள் மனித இறைச்சியை ஏற்றுமதி செய்யவில்லை என கூறியுள்ளது.
மேலும், சீனா சாம்பியா மத்தியிலான ஆரோக்கியமான உறவிற்கு பாதகம் விளைவிக்கும் வகையில் யாரோ செய்த பித்தலாட்டம் இது என சீனா பதிலளித்துள்ளது
இறந்த மனித உடல் உறுப்புகளை தவறுதலாக உண்டாலும் கூட தீய பாக்டீரியா தாக்கங்கள், வைரஸ் தொற்று மற்றும் கொடிய நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்புகள் உள்ளன.
மேலும், இதனால் உண்டாகும் வைரஸ் தொற்றால் மூளையில் பாதிப்புகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன
மனித இறைச்சியை ஆப்ரிக்காவிற்கு ஏற்றுமதி செய்த சீனா? பகீர் புகைப்படங்கள்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 26, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)





No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.