Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 25, 2016

சில இரவுகளுக்கு பல இலட்சம் கேட்கும் இளம் மனைவிகள்



சில இரவுகளுக்கு பல இலட்சம் கேட்கும் இளம் மனைவிகள்

தற்போது இந்தியாவில் இளம் பெண்களிடையே பரவலாக ஒரு புது வியாபார யுக்தி பரவிவருகிறது.  சில இரவுகள் கணவனுடன் படுக்கையை பகிர்ந்துகொண்டதற்காக தேய்மானச் செலவாக பல இலட்சங்களை நஷ்ட ஈடாக கணவனிடம் கேட்கிறார்கள்.  இதற்கு அவர்கள் “குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை” பயன்படுத்துகிறார்கள். 
இந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் 2005ம் ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.  இந்த சட்டத்தின் மூலம் கணவனுடன் சில இரவுகளை கழித்ததற்காக கணவனின் சொத்துக்கள், வீடு, மாதந்தோறும் பல ஆயிரங்களில் பராமரிப்பு செலவு மற்றும் தன்னை கணவன் பயன்படுத்தியதற்காக தேய்மானச் செலவு பல இலட்சங்கள் என பட்டியலிட்டு நீதிமன்றத்தில் ஒரு மனு கொடுத்தால் உடனடியாக நீதிபதி இவையனைத்தையும் கணவன் கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டுவிடுவார். 
கணவன் போதிய அளவு பண வசதியில்லாதவர் என்றால் சிறுநீரகத்தை விற்றாவது பணத்தைக் கட்டவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடும்.

இதுபோன்ற வழக்குகளில் விசித்திரமான விஷயம் என்னவென்றால் இந்தியாவில் கல்வியறிவில்லாத பல ஏழைப் பெண்கள்கூட கூலி வேலை செய்து தங்களது வாழ்வை தானே சுயமாகவும், கௌரவமாகவும் நடத்துகிறார்கள்.  கல்வி கற்க வேண்டிய வயதில் பல குழந்தைகள்கூட தொழிலாளிகளாகவேலை செய்து  வாழ்கிறார்கள்.   
ஆனால்  உயர் கல்வி கற்று சுயமாக சம்பாதிக்கும் திறனும், அறிவும் உள்ள பல இளம் மனைவிகள் சட்டம் சாதகமாக இருக்கிறது என்பதற்காக தங்களது கணவனுடன் சில இரவுகள் கழித்ததற்காக பல இலட்சங்களை கணவனிடம் வாங்கித் தரும்படி நீதிமன்றத்தை நாடுகிறார்கள்.  இவர்களால் பணம் ஈட்டி சுயமாக தங்களை பராமரித்துக் கொள்ள முடிந்தாலும்  இப்படி பணம் சம்பாதிக்க நினைப்பது  பாரம்பரியம் மிக்க ஒரு தொழிலை நினைவு படுத்துவது போல இருக்கிறது அல்லவா!!!! இந்திய சட்டங்கள் இப்படி பெண்களை மாற்றிவிட்டதா? அல்லது இளம் பெண்கள் இப்படி மாறிவிட்டார்களா? 


குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமான இன்று  கல்வி கற்க முடியாமல் கடினமாக உழைத்து வாழ்க்கையை நடத்தும் குழந்தைகள் படும் இன்னல்களை ஒரு பக்கம் நினைத்துப் பார்க்கும் போது மற்றொரு பக்கம் நன்கு படித்து அனைத்து வசதிகளுடன் கூடிய இளம் பெண்கள் இப்படி சுய கௌரவத்தை இழந்து பணம் ஈட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.