July 23, 2016
ராணுவ ரகசியங்கள் கை மாறப்பட்டத? வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய முன்னாள் ராணுவ அதிகாரி கைது
அரசியல்வாதிகளிடம் ஆதாயம் பெற நாடாளுமன்ற உறுப்பினர் என கூறி ஆள்மாறாட்டம் செய்து வெளிநாட்டு பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்த பிரித் இந்திரா நாத் சன்யால் என்ற முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரை போலீசார் கைது ெசய்துள்ளனர். இந்திய ரணுவத்தின் முன்னாள் அதிகாரி பிரித் இந்திரா நாத் சன்யால். இவர் பணி ஓய்வுக்கு பிறகு லக்னோவில் ரப்பர் டயர் கம்பெனி வைத்து தனியாக தொழில் செய்து வந்துள்ளார். அதன்பின், தொழிலை விரிவுபடுத்தி டெல்லியில் இரண்டு கன்சல்டன்சி நிறுவனங்களை தொடங்கி நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இவரது டெல்லி அலுவலகம் மற்றும் சப்தார்ஜங் பகுதியிலுள்ள சன்யாலின் வீட்டில் கடந்த மாதம் 2ம் தேதி சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்ப்றினர். அதில் முக்கிய பிரமுகர்களின் செல்போன் எண்கள், டைரிகள், எம்பிக்களின் லட்டர்பேடுகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். மேலும், சோதனையின் போது, அந்த வீட்டில் பெண் ஒருவரும் இருந்தார். அதிகாரிகளை கண்டதும் தனது கையை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை பிடித்து விசாரித்ததில் சன்யால் குறித்து முன்னுக்கு பின் முரணமாக பதிலளித்தார்.
பின்னர், உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்றும் தன்னை இங்கு அடைத்து வைத்துள்ளதாவும் தெரிவித்து இங்கிருந்து காப்பாற்றி அழைத்து செல்லுமாறு அதிகாரிகளிடம் கெஞ்சினார். இதையடுத்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசாருக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அந்த பெண்ணை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த வீட்டில் விபச்சாரம் நடப்பதை பெண் தெரிவித்தார். மேலும், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளை தான் கவனித்து வந்ததாகவும் தெரிவித்தார். இதில் சன்யால் மட்டுமின்றி முன்னாள் ராணுவ அதிகாரி குளோனல் என்பருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், போலீசார் நேற்று முன்தினம்(வியாழன்று) திடீரென சன்யாலின் வீட்டில் புகுந்து அதிரடி சோதனை நடத்தி சன்யாலை கைது செய்தனர். அப்போது அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில், வெளிநாட்டு பெண்கள் பற்றிய தகவல்கள், அவர்களது பாஸ்போஸ்டுகள் மற்றும், இந்தியாவை சேர்ந்த அரசு உயரதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் செல்போன் எண்கள் குறிக்கப்பெற்ற டைரிகள் என அனைத்தையும் கைபற்றினர். குறிப்பாக, போலியாக தயாரிக்கப்பட்ட எம்பி நரேஷ் அகர்வாலின் லட்டர் பேர்டை கைப்பற்றினர். இவர் சமாஜ்வாடி கட்சியின் எம்பியாக உள்ளார். இவரது பெயரை பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து தேவையான காரியங்களை நிறைவேற்றக்கொண்டு வந்துள்ளார் என்பது சன்யாலிடம் போலீசார் நடத்திய விசாரணயைில் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
ஹைடெக் முறையில் வெளிநாட்டு பெண்களை கொண்டு விபச்சாரம் நடத்திய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சன்யால், முன்னாள் ராணுவ அதிகாரி என்பதும், இவருக்கு பல முக்கிய அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளளுடன் தொடர்பு இருந்துள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழுவதுமான விசாரணை முடிந்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராணுவ ரகசியங்கள் கை மாறப்பட்டத? வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய முன்னாள் ராணுவ அதிகாரி கைது
Reviewed by மறத்தமிழன்
on
July 23, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
July 23, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.