Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 21, 2016

வெளி உலக தொடர்பு இன்றி இந்தோனேசிய தீவுகளில் வாழும் அபூர்வ ஆதிவாசிகள்!



வெளி உலக தொடர்பு இன்றி இந்தோனேசிய தீவுகளில் அபூர்வ ஆதிவாசிகள் வாழ்கின்றனர். இந்தோனேசியா பல தீவுகளை உள்ளடக்கிய நாடு. அங்குள்ள தீவுகளில் பலவித கலாசாரங்களுடன் கூடிய ஆதிவாசிகள், பூர்வக்குடி மக்கள் வாழ்கின்றனர்.அவர்களில் சுமத்ரா தீவில் மென்டாவை என அழைக்கப்படும் அபூர்வ ஆதிவாசிகள் வாழ்கின்றனர். இவர்கள் தங்கள் உடல் முழுவதும் பச்சைக் குத்திக் கொள்கின்றனர். மேலும் நாடோடிகளாக வாழ்ந்து வருகின்றனர்.அதில் விசேஷம் என்னவென்றால் நாடோடிகளாக வாழும் இவர்கள் தாங்கள் குடியிருக்கும் இடங்களில் வேட்டையாடும் விலங்குகளின் மண்டை ஓடு மூலம் வீடு அமைத்து வாழ்கின்றனர்.

 
இவர்கள் வெளிஉலக தொடர்பின்றி ஒதுங்கியே வாழ்க்கை நடத்துகின்றனர். செடி, கொடி உள்ளிட்ட அனைத்துக்கும் ஆத்மா இருப்பதாக நம்புகின்றனர். மெண்டாவை இன மக்கள் சுமார் 64 ஆயிரம் பேர் உள்ளனர்.இவர்கள் குறித்து மலேசியாவில் கெலடன் பகுதியை சேர்ந்த முகமது சாலேபின் டோலாஹ் என்பவர் வீடியோவை வெளியிட்டார். புகைப்பட துறையில் ஆர்வமுடைய இவர் இந்தோனேசியாவில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச் சூழலை போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.





No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.