Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 25, 2016

தலித் பெண்களை நிர்வாணப்படுத்தி கொடுமை: உ.பி.யில் நடந்த அவலம்!



லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலத்தில் தலித் பெண்கள் 5 பேர் நிர்வாணப்படுத்தப்பட்டு  ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட கொடுமை நடந்துள்ளது.  இதுதொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


உத்தரப்பிரதேச மாநிலம் ஷகாஜாகான்பூர் மாவட்டத்தில் உள்ள ஹாரிவா கிராமத்தில், தலித் சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், வேறு சமூகத்தைச்  சேர்ந்த பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து  அந்த இளைஞரும் இளம்பெண்ணும் தங்கள் ஊரைவிட்டு  தலைமறைவாகியுள்ளனர்.


இச்சம்பவத்தை அடுத்து பெண்ணின் உறவுக்காரர்கள் தலித் வாலிபரின் உறவுக்கார பெண்கள் 5 பேரின் ஆடைகளை களைந்து, ஊர்வலமாக இழுத்து சென்றுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. இச்சம்பவம் தொடபாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவத்தில் தொடர்பு உடைய 5 பேரை கைது செய்து உள்ளனர்.


இச்சம்பவத்தை அடுத்து கிராமத்தில் பெரும் பதற்றம்   ஏற்பட்டு உள்ளது. போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.