Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 19, 2016

பாலியல் தொந்தரவு செய்த கும்பல்: விஷம் குடித்து உயிரை மாய்த்த திருநங்கை!!



நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகில் உள்ள ஆதனூரை சேர்ந்தவர் மதுமிதா (வயது25). திருநங்கையான இவர் பி.ஏ. வரை படித்து முடித்துள்ளார். கடந்த 8 வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய மதுமிதா பழனிக்கு வந்தார்.
பழனி அருகில் உள்ள ராமநாதபுரம் என்ற இடத்தில் 60–க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஒன்றாக வசித்து வருகின்றனர். அவர்களுடன் மதுமிதாவும் சேர்ந்து வசித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த சிலர் மதுமிதா ரோட்டில் நடந்து செல்லும் போது கேலி, கிண்டல் செய்து வந்தனர்.
நேற்று இரவு மதுமிதாவை அதே பகுதியை சேர்ந்த சிவா, சதீஷ் மற்றும் இவரது தம்பி ஆகிய 3 பேரும் தரக்குறைவாக பேசி கேலி செய்தனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே 3 பேரும் மதுமிதாவை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதனை மற்ற திருநங்கைகளிடம் மதுமிதா கூறினார். மேலும் இது குறித்து அடிவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர்.
ஆனால் அவர்கள் புகாரை வாங்க மறுத்து அவர்களை விரட்டியடித்தனர். இதனால் மனமுடைந்த மதுமிதா விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மதுமிதா இன்று காலை இறந்தார்.
தகவல் அறிந்ததும் ஏராளமான திருநங்கைகள் ஒன்று திரண்டனர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு ஆவேசப்பட்டனர்.
அதன்பின்னர் திருநங்கைகள் கூறியதாவது:–
நாங்கள் மதுமிதா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த போது பழனி அடிவாரம் மற்றும் டவுன் போலீஸ் நிலையத்துக்கு சென்றோம்.
அப்போது போலீசாரிடம் மதுமிதா உயிருக்கு போராடுகிறார். அவருக்கு நேர்ந்த சம்பவம் குறித்து மரண வாக்குமூலமாவது வாங்கி அவரை பாலியல் பலாத்காரம் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தோம். ஆனால் போலீசார் கண்டுகொள்ளவில்லை என்றனர்.
அதனை தொடர்ந்து அடிவாரம் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.