Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 23, 2016

மோடியின் குஜராத்தில் தலித்துகளின் எழுச்சி



மோடியின் குஜராத்தில் தலித்துகளின் எழுச்சி

இறந்த மாட்டின் தோலை உரித்ததற்காக நான்கு தலித் இளைஞர்களை கட்டிவைத்து உதைத்தார்கள் மோடியின் குஜராத்தில். அந்த கொடூரத்திற்கு எதிராக அங்கே மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளது. பல இடங்களுக்கும் போராட்டம் பரவுகிறது. இறந்த கால்நடை களை இனி அப்புறப்படுத்தமாட்டோம், அவற்றை புனிதமாக கருதுவோரே அந்த காரிய த்தை செய்யட்டும் என்று சொல்லி அவற்றை ராஜ்கோட் -அகமதாபாத் பிரதான சாலை யில் கொண்டுவந்து போட்டிருக்கிறார்கள். நாற்றம் தாங்கமுடியாமல் கடைகளை அடை த்துவிட்டு ஓடியிருக்கிறார்கள் புனிதவாதிகள். சபாஷ் இதுதான் பதிலடி. ஆனால் சில தலித்துகள் விஷம் அருந்தி எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்று வரும் செய்தி கவலை தருகிறது. (டிஒஐ ஏடு) நாம் ஏன் உயிரைவிட வேண்டும் ? உயிரைக் கையில் பிடித்துக் கொண்டாவது ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் அக்கிரமங்களை எதிர்த்துப்போராட வேண்டும், அவர்கள் உண்மையில் இந்துக்களுக்காக நிற்கவில்லை , வருணாசிரமத்திற்காக
நிற்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.