Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 12, 2016

“பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுக்க தமிழக அரசின் போர்க்கால நடவடிக்கை தேவை”: வைகோ



வேலூர் மாவட்டம் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் அமைத்து வரும் ஆந்திர அரசின் அடாவடி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த தமிழக அரசு போர்க்கால வேகத்தில் செயல்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வட மாவட்டங்களின் நீராதாரமான பாலாற்றில் ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காமல் வஞ்சிக்க வேண்டும் என்று முடிவெடுத்து ஆந்திர மாநில அரசு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மக்களின் எதிர்ப்பை அலட்சியப்படுத்தி வாணியாம்பாடியை அடுத்த புல்லூர் அருகே பெரும்பள்ளம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் உயரத்தை 5 அடியிலிருந்து 12 அடியாக உயர்த்திக் கட்டும் பணிகளை ஆந்திர அரசு செய்து வருவதாகவும் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது மேலும் ஒரு பேரிடியாக பாலாற்றின் குறுக்கே 2 இடங்களில் தடுப்பணைகள் கட்டி வருவதாக தகவல்கள் வருவதாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.

பாலாற்றின் குறுக்கே அணைகள் கட்டி வரும் ஆந்திர அரசின் நடவடிக்கைகளை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் அமைத்து வரும் ஆந்திர மாநில அரசின் அடாவடி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த தமிழக அரசு போர்க்கால வேகத்தில் செயல்பட வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.