Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 20, 2016

செத்தப்பசுமாட்டைக் வீசியெறிந்து குஜராத்தலித்துகள் போராட்டம்



செத்தப்பசுமாட்டைக்_வீசியெறிந்து
குஜராத்தலித்துகள்_போராட்டம்

செத்தபசுமாட்டுத் தோலை வைத்திருந்ததாகச் சொல்லி கடந்த ஜூலை 11ந்தேதி 4தலித் இளைஞர்களை கட்டி வைத்து அடித்த செய்தியை நீங்கள் அறிந்திருக்கலாம்.

RSSன் துணை அமைப்புகளின் ஒன்றான
கோ ரக்சன் சமிதி அமைப்பைச் சேர்ந்த குண்டர்கள்தான் இப்படி தாக்கியது

மாட்டிறைச்சி தடை காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பொறுமிக் கொண்டிருந்த குஜராத் தலித் அமைப்புகள் பொங்கியெழுந்துவிட்டன

அகமதாபாதில் சுரேந்திரநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் 5வாகனங்களில் செத்த பசுமாடுகளைக் கொண்டு வந்து வீசிச் சென்றனர்

யாரும் நீக்க முன்வராததால் நாற்றம் அதிகமாகி அலுவலர்கள் வேலைக்கு வராமல் ஓடிவிட்டனர்.

அடிவாங்கிய அவர்கள் பரம்பரையாக செத்த மாடுகளின் தோல் எடுத்து வியாபாரம் செய்து வருபவர்கள்

அதைச் சொல்லியும் கேட்காமல் எங்கிருந்து தோலெடுத்தாயென கேட்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர்" என்கின்றனர் தலித் அமைப்பினர்.

இந்த சங்பரிவார் காட்டுமிராண்டி நாய்களால் சாதாரண மக்கள் வாழ்வாதாரமே கேள்விக்குள்ளாகியுள்ளது

சோதனைச்சாவடி, விடுதிகள்,மாட்டுச் சந்தைகள், வெளிநாட்டினர் விடுதிகள், டெல்லி MP விடுதி, இறைச்சி கடைகள் என எங்கும் போய் சட்டத்தை கையிலெடுத்து சோதனை செய்கிறார்கள் இந்த கலாச்சார ரவுடிகள்.

இப்போது வடமாநிலங்களில் மெல்லமெல்ல இந்த பிரச்சனை வெடித்து கிளம்புகிறது.

"ஏற்கெனவே இயற்கையாலும் நட்டத்தாலும் வறுமையில் கிடக்கும் விவசாயிகளுக்கு மாடுதான் ஒரே வாழ்வாதாரம். மாட்டிறைச்சித்தடை,
மாட்டுவியாபாரத்தை முடக்குவது பயங்கர கொடூரமென" மகாராஷ்ட்ரா பிஜேபி MLAவே புலம்புகிறார்

"கிராமங்களில் விவசாயிகளை சந்திக்கவே பயமாக இருக்கிறது" என்கிறார் மற்றொரு பிஜேபி MLA.

மாடால் 'இந்தியா' உடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.