Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 20, 2016

நரிக்குறவர் இன பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போலீசார் மீது வழக்கு


 

நரிக்குறவர் இன  பெண்களை போலீசார் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக காவல்துறை தலைவர், உள்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் விளாச்சேரி மொட்டமலையைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற நரிக்குறவ இனபெண், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வியாபாரத்திற்கு சென்ற தன் மகன், மருமகள் உள்பட 13 பேரை மண்டைக்காடு போலீசார் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி கைது செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்களை ஒரு இருட்டறையில் அடைத்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் மனுவில் அவர் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன், பி.கோகுல்ராஜ் அடங்கிய அமர்வு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறப்படும் பெண்களை விசாரித்தனர். பின்னர் இது தொடர்பாக டிஜிபி, உள்துறை செயலர், கன்னியாகுமரி எஸ்.பி. உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.