சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, ராம்குமாருக்கு வரும் 18ம் தேதிவரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராம்குமார் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில், உண்மை குற்றவாளியை காப்பாற்ற என்மீது பழி போடப்பட்டுள்ளது. எனக்கும் சுவாதி கொலைக்கும் தொடர்பு இல்லை. இவ்வாறு ஜாமீன் மனுவில் ராம்குமார் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாறுபட்ட தகவல்
சுவாதியை கொலை செய்தது ராம்குமார்தான் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. அவர் அளித்த வாக்குமூலம் என்று கூறி, ஊடகங்களுக்கு செய்திகளை பரப்பி வந்தது காவல்துறை. இந்நிலையில், ராம்குமார் தனது மனுவில் இவ்வாறு கூறியுள்ளார்.
வக்கீல் பேட்டி
இதனிடையே, ராம்குமார் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கோர்ட்டுக்கு வெளியே நிருபர்களிடம் கூறுகையில், 'சுவாதி கொலை நடைபெறும் 2 நாட்களுக்கு முன்பே சுவாதியை யாரோ தாக்கியுள்ளனர். அதுகுறித்து விசாரித்து உண்மையை வெளியே கொண்டுவர வேண்டும்.
நெருக்கடி
2 நாட்களுக்குள் வழக்கை முடிக்க கோர்ட் வலியுறுத்தியதால், ராம்குமாரை இந்த வழக்கின் பலிகடாவாக போலீசார் மாற்றியுள்ளனர். அவர் மீது தவறு இல்லை.
கழுத்தை அறுத்தனர்
போலீசார் கைது செய்யபோனபோது, ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறியது பொய். ராம்குமார் தற்கொலைக்கு முயலவில்லை. போலீசாருடன் சென்ற நபர்கள்தான், ராம்குமாரின் கழுத்தை அறுத்து தற்கொலை நாடகம் நடத்தியுள்ளனர். இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி பரபரப்பு பேட்டியளித்தார்.
போட்டோ வெளியானது
ராம்குமார் தற்கொலைக்கு முயன்றபோது கழுத்தை அறுத்து கொண்டதாக போலீசார் கூறிய சில மணி நேரங்களில், அவர் கழுத்தை அறுத்துக் கொண்டிருந்ததை போன்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் உலவவிடப்பட்டன. கழுத்தை அறுக்கும்போது போலீசார் ஏன் போட்டோ எடுக்க வேண்டும் என்ற கேள்வி அப்போதே எழுந்தது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.