சுவாதி கொலை வழக்கில் நிறைய சந்தேகங்கள் உள்ளதால் அதனை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தியாகி இரட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாளை முன்னிட்டு ஓட்டேரியில் உள்ள சீனிவாசனின் நினைவிடத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மரியாதை செய்தார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமன்றி அனைத்து மக்களின் மேம்பாட்டுக்காக பாடுப்பட்டவர் தியாகி இரட்டைமலை சீனிவாசன். அவரது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் தமிழக அரசு இரட்டைமலை சீனிவாசன் பெயரில் விருதுகளை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. தலைநகர் சென்னையில் சுவாதி என்னும் ஐடி ஊழியர் நுங்கம்பாக்கத்தில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தற்போது பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனவே, இதனை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். சுவாதியின் சகோதரிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் ஆசிரியை நந்தினியிடம் கொள்ளையடிக்க முயன்ற போது அவர் மரணமடைந்தார். இந்த கொள்ளை சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுமாதிரியான சம்பவங்களை தடுக்க காவல்துறை முனைப்புடன் செயல்பட வேண்டும்'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.