Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 18, 2016

பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை நாய்களுக்கு உணவாக்கிய பெற்றோர்!



சென்னை தாம்பரம் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளங்குழந்தையை இரக்கமின்றி சாலையோரம் வீசிச்சென்ற பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அருகேயுள்ள சிட்லப்பாக்கத்தில் கடந்த 11ம் தேதி பிறந்த சில மணி நேரமே ஆன பச்சிளங்குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. துப்பட்டாவால் சுற்றப்பட்ட அந்தக் குழந்தையின் உடல் உறுப்புகளை நாய்கள் கடித்துக் குதறியிருந்தது.
குழந்தை சாலையில் வீசிச் சென்றவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில், சிட்லபாக்கத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணிபுரியும் ராம் பகதூர் என்பவர் குழந்தையை வீசிச் சென்றதை போலீசார் கண்டறிந்தனர்.
விசாரணையில் ராம்பகதூர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், 10 ஆண்டுகளாக அடுக்கு மாடி குடியிருப்பில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. பெண் குழந்தை என்பதால், தனது மனைவியின் ஒப்புதலுடன் சாலையில் வீசிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பெற்றோரை கைது செய்துள்ளனர்.
பிறந்த சில மணி நேரமே ஆன பச்சிளங்குழந்தையை பெற்றோரே இரக்கமின்றி சாலையில் வீசிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.