Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 24, 2016

குடிக்கு அடிமையாகும் கணவன்; சுகம் தேடி வெளியே செல்லும் மனைவி ஆய்வில் பகீர் தகவல்



தமிழகத்தில் குடிப்பழக்கத்தால் கணவனை இழந்து, மகனை இழந்து, அப்பாவை இழந்து பல குடும்பங்கள் தவிக்கும் செய்திகளை நாம் பார்த்திருப்போம். சமீப காலமாக தமிழகத்தை சீரழிக்கும் மதுபான கடைகளை நிரந்தரமாக மூட பல போராட்டங்கள் நடந்து வருகின்றன.
 
இந்த சூழலில் இந்த குடிப்பழக்கத்தால் சமூக கலாச்சாரம் சீரழியும், குடும்ப உறவை சிதைக்கும் சில சம்பவங்களும் நடப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபத்தில் ஆல்கஹாலிக் அனானிமஸ் என்கிற அமைப்பு தமிழ்நாடு முழுவதும் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.

நாள் முழுவதும் குடித்து எந்த வேலைக்கும் செல்லாமல் வறுமையில் இருக்கும் ஆண்களின் மனைவிகளில் 80 சதவீதம் பேர் தங்கள் மன அழுத்தம் அதிகமாகி உடல் சுகத்திற்காக பிற ஆண்களை தேடி செல்வதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

பணி செய்யும் இடத்திலும் இதுபோன்ற வற்புறுத்தலுக்கு அனுசரித்து போகின்றனர். குடும்பம் நடத்த வேண்டும், பிள்ளைகளை வளர்க்க வேண்டும், படிக்க வைக்க வேண்டும், கணவனால் எந்த பயனும் இல்லை போன்ற காரணங்களால் பெண்கள் இத்தகைய முடிவை எடுப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.