Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 27, 2016

சவூதி அரேபியாவில் இந்தியர் சுட்டுக் கொலை!



சவூதி அரேபியாவின் ஜெத்தா பகுதியில் ஓட்டலில் பணிபுரிந்த கேரள  வாலிபரை, அந்நாட்டை சேர்ந்தவர்  சுட்டுக்கொன்ற வீடியோ காட்சி தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஜெத்தா நகரில் உள்ள ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில் கேரளாவைச் சேர்ந்த நஸீர் பணியாற்றி வந்தார். அவரிடம் அந்நாட்டைச் சேர்ந்த அரபி ஒருவர் உணவு  ஆர்டர் செய்துள்ளார்.
உணவு தயார் செய்ய கால தாமதமானதாக கூறப்பட்ட நிலையில், நஸீரிடம், அந்த சவூதியர்  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் நஸீரை அந்த நபர் தாக்கத்தொடங்கியதால் ஆத்திரமடைந்த நஸீர், அவரை பதிலுக்கு தாக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சவூதி இளைஞர் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து நஸீரை சுட்டார். இதில் பலத்த காயமடைந்த நஸீர் சம்பவ இடத்திலே பலியானார்.
பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தை சக ஊழியர்கள் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ததால், இச்சம்பவம் அந்நாட்டில் தீயாக பரவியது.
இதனைத்தொடர்ந்து நஸீர் கொலை தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இக்கொடூர செயலில் ஈடுபட்ட சவூதி இளைஞருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.