July 19, 2016
ஜவுளி கடை உரிமையாளரை கத்தியால் குத்தி தாக்கிய மர்ம நபர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஜவுளி கடை உரிமையாளர் கத்தியால் குத்தி கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் சிசிடிவி காமிராவில் பதிவான காட்சியை வைத்து ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி டவுன் மண்டி வீதியில் உள்ள துணிக்கடைக்கு நேற்று வந்த மூன்று பேர், துணி எடுத்து விட்டு பணம் கொடுக்க மறுத்துள்ளனர்.
கடை உரிமையாளர் கணேஷ் பணம் கேட்டு வலியுறுத்தவே அவரை கத்தியால் பயங்கரமாக தாக்கிவிட்டு மூவரும் தப்பியோடி விட்டனர்.
இதனையடுத்து படுகாயம் அடைந்த கணேஷ் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் ஆரணி-சேத்துபட்டு நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி கூறியதின் பேரில் சாலைமறியல் கைவிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை வைத்து புரட்சி பாரதம் கட்சியை சேர்த்த மணிவண்ணனை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்
ஜவுளி கடை உரிமையாளரை கத்தியால் குத்தி தாக்கிய மர்ம நபர்கள்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 19, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 19, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.